ரூ.199-யில் நெட்ஃப்ளிக்ஸின் ‘மொபைல் பிளான்’- நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 24 ஜூலை 2019 14:05 IST
ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் மட்டுமே இந்தத் திட்டத்தை நெட்ஃப்ளிக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது
  • ஸ்மார்ட்போன் அல்லது டேப்லட்டில் மட்டும் இந்தத் திட்டம் வேலை செய்யும்
  • ஒரு திரையில் மட்டுமே இந்த திட்டத்தைப் பயன்படுத்தி வீடியோ பார்க்க முடியும்

டிவியில் இந்த பிளான் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் இணைப்பு கொடுக்க முடியாது. 

ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ், மொபைல் போன்களுக்கென பிரத்யேக சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பல மாத சோதனைக்குப் பின்னர் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 199 ரூபாய்க்கு இந்த மொபைல் பிளான், மூலம் போன்களுக்கு மட்டும் சப்ஸ்கிரிப்ஷன் பெற முடியும். எஸ்.டி தரத்தில் மட்டுமே இந்த சப்ஸ்கிரிப்ஷன் மூலம் வீடியோவைப் பார்க்க முடியும். நெட்ஃப்ளிக்ஸ், சாதரணமாக தனது மாதாந்திரக் கட்டணத்தை 499 ரூபாய் என வைத்துள்ளது. அதை ஒப்பிடும்போது, ரூ.199 என்பது மிகக் குறைவாகவே உள்ளது. இதனால், பலர் நெட்ஃப்ளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷனைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மொபைல் பயனர்களை மட்டும் குறிவைத்து இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது நெட்ஃப்ளிக்ஸ். 

இந்த ரூ.199 திட்டத்தைப் பெறுவதன் மூலம் டேப்லட் அல்லது மொபைல் போன்களில் ஒரு திரையில் மட்டும் நெட்ஃப்ளிக்ஸ் தள வீடியோக்களைப் பார்க்க முடியும். டிவியில் இந்த பிளான் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் இணைப்பு கொடுக்க முடியாது. 

உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு, இந்தியாவில்தான் மொபைல் மூலம் நெட்ஃப்ளிக்ஸைப் பயன்படுத்துபவர்கள் அதிகம் என்பதால், இந்தத் திட்டத்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங்கில் முன்னணியில் இருக்கும் அமேசான் பிரைம் மற்றும் ஹாட் ஸ்டாருடன் நெட்ஃப்ளிக்ஸ் ஆக்ரோஷமாக போட்டியிட உள்ளது. 

ஹாட்ஸ்டாரின் ஒரு மாத சப்ஸ்கிரிப்ஷன் 299 ரூபாய் ஆகும். அமேசான் பிரைமின் ஒரு மாத சப்ஸ்கிரிப்ஷன் 129 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.   

“இந்தியாவில் இருக்கும் எங்களது வாடிக்கையாளர்கள், அதிக நேரம் மொபைல் போன் மூலம் வீடியோக்கைப் பார்க்கின்றனர். உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு இந்த செயல் இந்தியாவில் அதிகமாக உள்ளது. எனவே, அவர்களுக்கு ஏற்றவாறு ரூ.199 திட்டம் அமையும். இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு, இதற்கு எப்படி வரவேற்பு கிடைக்கிறது என்பதைப் பார்த்து அடுத்தடுத்த பணிகளை செய்வோம்” என்று நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் அஜெய் அரோரா கூறியுள்ளார். 


 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Netflix, Netflix India
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.