இந்தியாவில் நெட்பிளிக்ஸின் குறைந்த விலை 'மொபைல் ஒன்லி' திட்டம்!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 18 ஜூலை 2019 16:11 IST
ஹைலைட்ஸ்
  • 250 ரூபாய் என்ற விலையில் இந்த திட்டம் அறிமுகமாகவுள்ளது
  • கடந்த மார்ச் மாதம் முதலே இந்த திட்டத்திற்கான சோதனை நடத்தப்பட்டது
  • ஹாட்ஸ்டாரில் இதே மாதிரியான ஒரு மாதத்திட்டத்தின் விலை 299 ரூபாய்

நெட்பிளிக்ஸ் நிறுவனம் கடந்த புதங்கிழமையன்று வெளியிட்டிருந்த தகவலின்படி, இந்தியாவில் குறைந்த விலையில் 'மொபைல் ஒன்லி' திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறியுள்ளது. இந்த நிறுவனம், கடந்த மார்ச் மாதம் 250 ரூபாய் அளவிலான ஒரு மாத சந்தா திட்டத்தை சொதனை செய்துகொண்டுள்ளதாக கூறியிருந்தது. நெட்பிளிக்ஸின் இந்த திட்டம், இதன் போட்டியாளர்களான அமேசான், ஹாட்ஸ்டாரை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 

'பல மாத சோதனைகளுக்கு பிறகு, இறுதியாக இந்த குறைந்த விலை மொபைல் ஸ்கீரின் திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறோம்' என நெட்பிளிக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. 

மேலும் கூறுகையில்,"இந்த ஆண்டின் மூன்றாம் பகுதியில் அறிமுகமாகவுள்ள இந்த திட்டம், இந்தியாவில் நெட்பிளிக்ஸிற்கு பல புதிய பார்வையாளர்களை கொண்டுவரும் என நாங்கள் நம்புகிறோம்' எனக் கூறியுள்ளது. 

நெட்பிளிக்ஸ் தற்போது, 500 ரூபாய் முதல் 800 ரூபாய் வரையில் 3 மதங்களுக்கான திட்டத்தை வைத்துள்ளது.

ஹாட்ஸ்டாரும், இதே போன்று ஒரு மாத திட்டத்தை 299 ரூபாய் என்ற விலையில் வாடிக்கையாளர் பயன்பாட்டிற்காக வைத்துள்ளது.

முதலில் இந்தியாவில் மட்டுமே அறிமுகமாகியுள்ள இந்த திட்டத்திற்கான வரவேற்பு எம்மாதிரி இருக்கிறது என்பதை வைத்துதான், உலக முழுவதும் இந்த திட்டத்தை விரிவு படுத்தலாமா, இல்லை வேண்டாமா என முடிவெடுக்கப்படும் என நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.

ஸ்கேர்டு கேம்ஸ், டெல்லி கிரைம் என பல ப்ளாக்பஸ்டர் தொடர்களை நெட்பிளிக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்கேர்டு கேம்ஸின் இரண்டாவது பாகம் கூட வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது. 

'இந்தியாவில் வளர்ச்சி என்பது மாரத்தான் போல. நாங்கள் அதில் நீண்ட காலமாக ஓடிக்கொண்டிருக்கிறோம்' என நெட்பிளிக்ஸின் தலைமை உள்ளடக்க அதிகாரி டெட் சரண்டோஸ் கூறியுள்ளார். 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Netflix, India

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.