“மனசில இருக்கிற பாரமே குறைஞ்சிடுச்சு!”- Netflix-ல் வெகு நாட்களா எதிர்பார்த்தது வந்திடுச்சு!!

விளம்பரம்
Written by Akhil Arora மேம்படுத்தப்பட்டது: 8 பிப்ரவரி 2020 13:20 IST
ஹைலைட்ஸ்
  • Netflix இந்த 'ஆட்டோ ப்ளே' எரிச்சலை ஏற்படுத்தலாம்
  • இதை மாற்ற பயனர்கள் கோரிக்கை வைத்தனர்
  • திடீரென்று ஆட்டோ ப்ளே மூலம் வரும் சத்தம் பலருக்கு எரிச்சலைக் கொடுக்கும்

Netflix: இந்த மாற்றம் உடனடியாக அப்டேக் ஆகவில்லை என்றால், இன்னொரு ப்ரொஃபைலுக்குள் சென்று மீண்டும் உங்கள் ப்ரொஃபைலுக்குள் நுழைந்தால், சீக்கிமாக மாற்றம் நிகழும். 

Photo Credit: Akhil Arora/Gadgets 360

Netflix: நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெகு நாட்களாக இருந்த வந்த ஒரு பிரச்னை தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் தளத்திற்குள் நுழைந்தவுடன் தன்னிச்சையாக படங்களின் டிரெய்லர்கள் ப்ளே ஆகும். என்னப் படங்கள் அல்லது வீடியோக்கள் இருக்கிறது என்பதை யாராவது நெட்ஃபிளிக்ஸ் தளத்திற்கு உள்ளே சென்று பார்த்தாலே போதும், ஒவ்வொரு படத்தின் டிரெய்லரும் தானாக ப்ளே ஆகும். இதனால், பலருக்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம். இது குறித்து நெட்ஃபிளிக்ஸ் பயனர்களும் புகார் தெரிவிக்காமல் இல்லை. சுமார் 16.7 கோடி பேர் நெட்ஃபிளிக்ஸ் பயனர்களாக இருக்கிறார்கள். அவர்களில் நிறைய பேர் இது குறித்து பல நாட்களாக குற்றஞ்சாட்டி வந்த நிலையில், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கடைசியாக ‘தானாக டிரெயலர்' ப்ளே ஆவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

நெட்ஃபிளிக்ஸ்-ல் எப்படி இந்த ‘ஆட்டோ ப்ளே'-ஐ நிறுத்துவது:

Netflix.com என்கிற முகவரியின் மூலம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தை திறக்க வேண்டும். இல்லையென்றால் மொபைல் செயலி மூலமும் திறக்கலாம். அதற்குப் பின்னர்:

-நெட்ஃபிளிக்ஸ் தளத்திள் சைன் இன் செய்து உள்ளே நுழையவும்

-எந்த ப்ரொஃபைல் உள்ளே இந்த ஆட்டோ ப்ளே இருக்கக் கூடாது என்று கருதுகிறீர்களோ அதற்குள் நுழையவும்

-‘Edit Profile' ஸ்க்ரீனுக்குக் கீழ் ‘Autoplay controls'-ஐ சொடுக்கவும். ‘Autoplay previews while browsing on all devices' என்பதை அன்-செக் செய்யவும்.

-மாற்றத்தை சேவ் செய்யவும். பிறகு ‘Done' என்பதை க்ளிக்கவும்.

இந்த மாற்றம் உடனடியாக அப்டேக் ஆகவில்லை என்றால், இன்னொரு ப்ரொஃபைலுக்குள் சென்று மீண்டும் உங்கள் ப்ரொஃபைலுக்குள் நுழைந்தால், சீக்கிமாக மாற்றம் நிகழும். 

Advertisement


 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Netflix, Auto Play
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் 'டேப்-டு-பாஸ்' (Tap-to-Pause) அம்சம் அறிமுகம்: வீடியோக்களைக் கட்டுப்படுத்துவது இனி எளிது!
  2. இந்தியாவில் Realme P4 Lite 5G அறிமுகம்: Dimensity 6300 சிப்செட் மற்றும் 7,000mAh பேட்டரி வசதி!
  3. இந்தியாவில் ஹுவாய் மேட்பேட் SE 11 (Huawei MatePad SE 11) அறிமுகம் உறுதி: விலை விவரங்கள் வெளியீடு
  4. இந்தியாவில் அறிமுகமானது மார்ஷல் ப்ரோம்லி 450 (Marshall Bromley 450): விலை மற்றும் சிறப்பம்சங்கள் இங்கே
  5. ஐடெல் (Itel) நிறுவனம் 'Zeno AI Weaver' வாய்ஸ் ரெக்கார்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது... பல சிறப்பான அம்சங்கள் இதில் உள்ளது
  6. Vivo V70 FE இந்திய விலை & வெளியீட்டு காலம் லீக்: எதிர்பார்க்கப்படும் விவரங்கள்
  7. Garmin ஸ்மார்ட்வாட்ச்களுக்கு WhatsApp ஆதரவு அறிமுகம்
  8. Powerbeats Pro 2 Nike ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்: Apple H2 சிப் மற்றும் ANC வசதியுடன்
  9. Oppo A6s 5G இந்தியாவில் அறிமுகம்: 6,500mAh பேட்டரி, MediaTek Dimensity 6300 சிப்செட் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  10. OnePlus 15T – சீனாவில் மார்ச் 24 அன்று அறிமுகம்... சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.