பாகுபலி தொடக்கத்துக்கு முன் என்ன?: புதிய நெட்ப்ளிக்ஸ் (Netflix) தொடர்

பாகுபலி தொடக்கத்துக்கு முன் என்ன?: புதிய நெட்ப்ளிக்ஸ் (Netflix) தொடர்
விளம்பரம்

 

பாகுபலி திரைப்படக் கதையின் பின்னணியாக, அதற்கு முந்தைய கதையைக் கூறும் புதிய தொடரை நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்துள்ளது. இதன் கதையானது பெரிதும் “The Rise of Sivagami” (2017) என்ற ஆனந்த் நீலகண்டனின் நாவலைத் தழுவி இருக்கும். இத்தொடருக்கு “Baahubali: Before the Beginning” என்று பெயரிடப்பட்டுள்ளது. இரண்டு சீசன்களாக இது வெளியிடப்படும். முதல் சீசன் ஒன்பது எபிசோடுகளைக் கொண்டிருக்கும். இதனை பாகுபலி இயக்குநர் ராஜமௌலியும் பாகுபலி திரைப்படத்தைத் தயாரித்த ஆர்க்கா மீடியா வர்க்ஸ் நிறுவனத்தாரும் இணைந்து தயாரிக்க உள்ளனர்.

இதுகுறித்து நெட்ப்ளிக்ஸ் தளம் வெளியிட்டுள்ள தகவல்:

 

This (prequel) series captures Queen Sivagami’s journey from a rebellious and vengeful girl to a wise and unequalled queen. Power, politics and intrigue find themselves juxtaposed against the rise of Mahishmati - from being a city-state to an empire. This is the rich backdrop and drama where the Baahubali franchise is set. The series promises to build on the incredible narrative style of the franchise - including its high production values, spectacular visuals and connective-epic story-telling.

புரட்சிக்குணம் மிக்க பழிவாங்கத் துடிக்கும் பெண்ணான சிவகாமி எப்படி மதிக்கூர்மை கொண்டவளாகவும் ஈடு இணையற்ற அரசியாகவும் மாறுகிறாள் என்பதைக் காட்டுவதாக பாகுபலியின் இம்முன்கதைத் தொடர் அமையவுள்ளது. அதிகாரம், அரசியல், சதி ஆகியவற்றின் பின்னிப்பிணைந்த பின்னணியில், நகர அரசில் இருந்து ஒரு வலிமை வாய்ந்த பேரரசாக மகிழ்மதியின்  பயணம் இணையத் திரையில் காட்சிகளாக விரிய உள்ளது. பிரம்மாண்டம், வியக்கவைக்கும் காட்சிகள், இதிகாசத்தன்மை வாய்ந்த கதைக்களம் போன்ற அம்சங்கள், பாகுபலி திரைப்படத்தின் இரு பாகங்களிலும் அமைந்தது போலவே இத்தொடரிலும் இடம்பெறும்.

தேவ கட்டா (பிரஸ்தாணம்), ப்ரவீன் சதரு (குண்டூர் டாக்கீஸ்) ஆகிய இருவரும் இத்தொடரை இயக்க உள்ளனர். கடந்த மாதமே இத்தொடரைப் பற்றி கட்டா கூறுகையில், மூன்று சீசன்களைக் கொண்டிருக்கும் என்று சொல்லியிருந்தார். ஆனால் தற்போதைக்கு நெட்ப்ளிக்ஸ் இரு சீசன்களுக்கான ஒப்புதலை அளித்துள்ளது. இவை பெறும் வரவேற்பைப் பொறுத்து மூன்றாம் சீசனின் எதிர்காலம் அமையும். ஏற்கனவே அமேசான் பிரைமில் “Baahubali: The Lost Legends” என்ற அனிமேசன் தொடர் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Netflix, Baahubali
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »