சர்கார், கத்தி மற்றும் கஜினி போன்ற பல முக்கிய படங்களை இயக்கிய தமிழில் முன்னணி இயக்குனரான ஏ.ஆர் முருகதாஸ் தற்போது டிஸ்னி ஸ்டூடியோஸ் உடன் இணையப்போவதாக தகவல் வெளியாகவுள்ளது.
உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் எண்ட் கேமிற்கு தமிழ் ஸ்கிரிப்டை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் எழுதப்போவதாக டிஸ்னி இந்தியா சார்பாக தகவல் வெளியாகியுள்ளது. 44 வயதான இயக்குனர் முருகதாஸ் பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை வெளியான எல்லா மார்வல் கதைகளை போலவே இந்த அவெஞ்ஜர்ஸ் எண்ட் கேம் படமும் ஆங்கிலம்,ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 26 -ம் தமிழுக்கான அறிவிப்பு மட்டும் வந்துள்ள நிலையில் இந்தி மட்டும் தெலுங்கில் இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை என்பது கூடுதல் தகவல்.
வட்டார மொழிகளில் ஹாலிவுட் படங்கள் வெளியாகுவது அதன் லாபத்தை அதிகரிக்க செய்கிறது. இதற்கு முன்னர் வெளியான இன்ஃப்னிட்டி வார் திரைப்படம் இந்தியில் டப் செய்யப்பட்டு வந்ததால் நல்ல வரவேற்பு பெற்றது. அத்திரைப்படம் மட்டும் தான் இந்தியாவில் ரூ.200 கோடியை வசூல் செய்த முதல் ஹாலிவுட் திரைப்படமாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்