Photo Credit: Disney/Marvel Studios
1.2 ஜிபியில், குறைந்த வீடியோ குவாலிட்டி கொண்ட அந்த வீடியோவில் முழு திரைப்படமும் கேமிராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சீனாவில் உள்ள திரையரங்குகளில் எடுக்கப்பட்டு முதலில் அங்குள்ள லோக்கல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்பின் அது உலகம் முழுவதும் பரவியுள்ளது.
இதேபோல், 2 வது ஒரு வீடியோ வெளியானது, அது 3.7 ஜிபி அளவு கொண்டிருந்தது. அதுவும் ஆனால், திரையரங்குகளில் கேமிராவில் பதிவு செய்யப்பட்ட ஒன்று தான். அதன் குவாலிட்டி முதலில் வெளியானதை விட சற்று தரமாக இருந்தது.
டோரண்ட் பிரிக் என்ற இணைதளமே முதலில் படம் டோரண்டில் வெளியானது குறித்து தகவல் தெரிவித்தது. அதில், ஆங்கில ஆடியோவும் சீன சப்டைட்டிலும் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. எனினும் அந்த வீடியோவின் குவாலிட்டி தரமாக இல்லாததால் யாரும் பார்க்க வாய்ப்பில்லை என்று கருதப்பட்டது.
எனினும் சிறிது நேரத்தில் அதனை விட சிறந்த குவாலிட்டி கொண்ட வீடியோவும் வெளியானது. அதில், ரஷ்யாவை சேர்ந்த நிறுவனத்தின் வாட்டர் மார்க் மற்றும் விளம்பரம் இடம்பெற்றுள்ளது. எனினும், இதிலும் ஆடியோ தெளிவாக இல்லை என டோரண்ட் பிரிக் இணையதளம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் 400 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட ஹாலிவுட் படம் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம். இந்த படத்தை இரட்டையர்கள் ரூஸோ பிரதர்ஸ் இயக்கியுள்ளனர். ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இதில் நடித்துள்ளனர்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்