ஆப்பிள் ஹோம்பாட் தற்போது கனடா, பிரான்சு, ஜெர்மணி ஆகிய மூன்று புதிய நாடுகளில் கிடைக்க உள்ளது. கிரே மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்க கூடிய ஹோம் பாட், கனடா நாட்டில் 449 டாலர்களுக்கும் (23,300 ரூபாய்), ஜெர்மனி மற்றும் பிரான்சு நாட்டில் 349 யூரோ (27,500 ரூபாய்) என்ற விலையில் விற்கப்படுகிறது. ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் ஆப் ஆகியவற்றில்
விற்பனைக்கு உள்ளது. அதுமட்டுமில்லாது, ஆப்பிள் நிறுவனத்தின் கிளை ஸ்டோர்களிலும் ,அதிகாரப்பூர்வ விற்பனையாளர்களிடமும் பெற்றுக்கொள்ளலாம்.
புதிய மூன்று நாடுகளில் விற்பனையை தொடங்குவதால் , ஆப்பிள் ஹோம்பாடில் ஜெர்மனி மற்றும் பிரஞ்சு மொழிகளை புரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஆப்பிள் வெளியிட்ட சாப்டுவேர் மூலம் ஹோம்பாடில் உள்ள சிரி பிரஞ்சு, ஜெர்மனி, கனடியன் ஆங்கிலம் ஆகிய
மொழிகளில் பேசக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஜூன் 18 ஆம் தேதி முதல் கனடா, பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகளில் விற்பனைக்கு வரும் என அறிவித்திருந்தது. மேலும், கனடியன் பிரஞ்சு மொழி வசதியை
இந்தாண்டு இறுதிக்குள் பதிவேற்றம் செய்ய போவதாக ஆப்பிள் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய iOS 11.4 உடன் சாப்ட்வேர் பதிவேற்றத்தை இணைத்து கொள்ளலாம்
iOS 11.4 வசதி உள்ளவர்களுக்கு, ஹோம்பாட் ஸ்டீரியோ சவுண்ட் வசதி இணைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியின் மூலம், ஹோம்பாட் இருக்கும் சூழலையும், இருப்பிடத்தையும் கணித்து சவுண்ட் முறையை சரி செய்து கொள்கிறது. ஸ்டீரியோ பேர்ஸ் வசதி ஹோம்பாட் அப்டேட்டில் பதிவேற்றப்படும். புதிய iOS 11.4
அப்டேட்டில், முன்னேறம் பெற்ற சிரி வசதிகள் உள்ளன. இதன் மூலம், சிரி பயன்படுத்தி எஸ்எம்எஸ் செய்வது, ரிமைன்டர், காலண்டர் என அனைத்தும் உபயோகிக்கலாம் ஆப்பிள் பொறுத்த வரை, ஹோம்பாடுகள் சிறப்பான விற்பனையை காணவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விற்பனைக்கு வந்த ஆப்பிள் ஹோம்பாட், அமேசான் அலெக்சியா, கூகுள் ஹோம் ஆகியவற்றின் விற்பனையால் பின்னடைவை சந்தித்தது. எனவே, அடுத்த முயற்சியாக, ஹோம்பாட்டின் விலை குறைந்த வெர்ஷனை வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்