ஜியோ ஃபைபர் பயனர்கள், வீடியோ அழைப்புகளை செய்ய, ரிலையன்ஸ் ஜியோ புதிய JioTVCamera-வை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ ஃபைபர் அறிமுகப்படுத்தப்பட்டபோது, பயனர்கள் ஜியோ ஃபைபர் செட்-டாப் பாக்ஸ் வழியாக வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. JioTVCamera என்பது, எந்த வீடியோ அழைப்புகளையும் சாத்தியமாக்குவதற்கு உங்கள் டிவி தொகுப்பில் இணைக்கக்கூடியதாகும். மூன்றாம் தரப்பு கேமராக்கள் செட்-டாப் பாக்ஸுடன் செயல்படுகின்றனவா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், டிவி வீடியோ அழைப்புக்காக உங்களிடம் கேமரா இல்லையென்றால், நீங்கள் Jio.com-ல் இருந்து JioTVCamera-வை வாங்கலாம்.
புதிய JioTVCamera-வின் விலை ரூ. 2,999 ஆகும். இது ஏற்கனவே Jio.com-ல் விற்பனையில் உள்ளது. இதை வாங்குபவர்களுக்கு EMI ஆப்ஷன்களையும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வருகிறது. மேலும், இது மூன்று முதல் ஐந்து வணிக நாட்களில் வழங்கப்படுவதாகக் கூறுகிறது. நிறுவனம், இந்த தயாரிப்புக்கு ஒரு வருட உத்தரவாதத்தையும், சேதங்கள் அல்லது குறைபாடுகள் ஏற்பட்டால் வழங்கப்பட்ட ஏழு நாட்களுக்குள் மாற்றுவதையும் வழங்குகிறது.
JioTVCamera என்பது ஒரு எளிய பிளக் மற்றும் ப்ளே ஆகும். இது முழு திரை தொலைக்காட்சி முதல் டிவி வீடியோ அழைப்புகளுக்கு, உங்கள் தொலைக்காட்சியின் மேல் வைக்கப்பட வேண்டும். இது ஜியோ ஃபைபர் செட்-டாப் பாக்ஸுடன் ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். தற்போதுள்ள மற்றும் புதிய பயனர்களுக்கு, நிறுவனம் செட்-டாப் பாக்ஸை இலவசமாக வழங்குகிறது. இது ஜியோ எண்களுக்கு மட்டுமே வீடியோ அழைப்புகளையும், அனைத்து மொபைல் மற்றும் லேண்ட்லைன் எண்களுக்கும் ஆடியோ அழைப்புகளையும் செயல்படுத்துகிறது.
JioTVCamera-க்கு தனி இன்ஸ்டாலேஷன் தேவையில்லை. மேலும் ,பயனர்கள் கேமராவின் யூ.எஸ்.பி முடிவை செட்-டாப் பாக்ஸீன் யூ.எஸ்.பி போர்ட்டில் செருக வேண்டும். செருகப்பட்டதும், செட்-டாப் பாக்ஸை மீண்டும் ரீபூட் செய்து, எளிதான OTP செயல்முறை மூலம் ஜியோகால் செயலியில் உங்கள் லேண்ட்லைன் எண்ணை செட் செய்யவும். பின்னர், பயனர்கள் ஜியோகால் செயலியின் மூலம் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம் மற்றும் பெறலாம். JioTVCamera, frame-ல் அதிகமானவர்களை இணைக்க 120 டிகிரி பார்வையை வழங்குகிறது. கேமராவின் எடை 93 கிராம் மட்டுமே ஆகும். 118x37.2x30.8mm அளவீட்டைக் கொண்டுள்ளது. இது 1/2.7-இன்ச் CMOS சென்சாரை 3.1mm குவிய நீளத்துடன் ஒருங்கிணைக்கிறது. மேலும் உள்ளீட்டு மின்னழுத்தம் 5V-யில் உள்ளது.
நினைவுகூர, கடந்த ஆகஸ்டில் செட்-டாப் பாக்ஸ் வெளியிடப்பட்டது மற்றும் ஏற்கனவே இருக்கும் மற்றும் புதிய ஜியோ ஃபைபர் பயனர்களுக்கு டிசம்பரில் இலவசமாக கிடைத்தது. ஜியோ ஃபைபர் செட்-டாப் பாக்ஸ் என்பது ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஸ்ட்ரீமிங் மீடியா பிளேயர் ஆகும். இது பயனர்களுக்கு அவர்களின் டிவி திரைகளில் OTT செயலிகள் வழியாக உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்யும் திறனை வழங்குகிறது. ஜியோ ஃபைபர் செட்-டாப் பாக்ஸில் Hotstar, YouTube, Voot, JioSaavn, JioTV Plus, SonyLIV மற்றும் JioCinema ஆகியவை இப்போது இயங்குகின்றன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்