Photo Credit: Olivier Douliery/ AFP
வீடியோ கான்ஃபிரன்சிங் செயலியான 'Zoom', தனி நபர் பயன்பாட்டிற்கு பாதுகப்பற்றது என்று உள்துறை அமைச்சகத்தின் சைபர் ஒருங்கிணைப்பு மையம் (CyCord) அறிவுறுத்தியுள்ளது. தேசிய சைபர்-பாதுகாப்பு நிறுவனமான, கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் ஆஃப் இந்தியா (CERT-In) இந்த செயலிக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் ஊரடங்கால் மக்கள் வீட்டிலேயே தங்கியுள்ளனர். அவர்கள் தங்கள், நண்பர்கள் உறவினர்களுடன் பல்வேறு வீடியோ கான்ஃபிரன்சிங் செயலிகள் மூலம் உரையாடி வருகின்றனர். அவற்றில் ஒன்று தான் சமீபத்தில் பிரபலமான "ஜீம்". இந்த செயலியை, அரசு அலுவலர்கள், தனியார் ஊழியர்கள் என மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த மாத தொடக்கத்தில், CERT-In இதேபோன்ற ஆலோசனையை வெளியிட்டதோடு, ஜூம் செயலியின் பாதிப்புகளுக்கு எதிராக எச்சரித்தது. "பாதுகாப்பற்ற சூம் செயலி, சைபர் குற்றவாளிகள் சந்திப்பு விவரங்கள் மற்றும் உரையாடல்கள் போன்ற முக்கியமான தகவல்களை ஹேக்கர்கள் திருடக்கூடும்" என்று நிறுவனம் கூறியுள்ளது.
கேம்ஜெட்ஸ் 360-க்கு ஜூம் பதிலளித்தது, இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது, ஆனால் அது செயல்படுத்தும் எந்தவொரு குறிப்பிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பகிர்ந்து கொள்ளவில்லை. மேலும், பாதுகாப்பற்ற தன்மையை குறித்த பல குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதிலளித்தது.
சான் ஜோஸ் நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் ஜூம் செயலியில் வெளிவந்த சில தனியுரிமை சிக்கல்களை ஒப்புக் கொண்டது. மேலும், தற்போதுள்ள தனியுரிமை மற்றும் பாதுகாப்பு சிக்கல்களைத் தீர்க்க எதிர்கால அப்டேடுகளை நிறுத்தியுள்ளது.
ஜூம் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் யுவான், யூடியூபில் லைவ் ஸ்ட்ரீமை நடத்தி பிரச்சனையை ஒப்புக்கொண்டார். ஜூம், தற்போதுள்ள சிக்கல்களைத் தீர்க்க கடுமையாக முயற்சித்து வருகிறது. மேலும், முன்னாள் பேஸ்புக் பாதுகாப்புத் தலைவர் அலெக்ஸ் ஸ்டாமோஸை ஆலோசகராக பணியமர்த்தியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்