மளிகை பொருட்கள் விநியோகத்தை தொடங்கியது ஜோமாடோ! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 8 ஏப்ரல் 2020 14:50 IST
ஹைலைட்ஸ்
  • ஜொமாடோ ஆரம்பத்தில் கேரளாவில் மளிகை விநியோக சேவையை இயக்கியது
  • ஸ்விக்கி பல இடங்களில் மளிகை பொருட்களையும் வழங்கத் தொடங்கியுள்ளது
  • ஊரடங்கு காரணமாக மளிகை விநியோக கோரிக்கைகள் வேகமாக வளர்ந்துள்ளன

ஜொமாடோ அதன் சமீபத்திய நடவடிக்கைக்கு பல்வேறு உள்ளூர் மளிகைக் கடைகள் மற்றும் எஃப்எம்சிஜி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது

உலகையே நிலைகுலையச் செய்திருக்கும் கொரோனா வைரஸ் தொற்று (COVID-19) காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக மளிகை விநியோக கோரிக்கைகள் வேகமாக வளர்ந்துள்ளதையடுத்து, மக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை Zomato வழங்கவுள்ளது. இதனை, ஜோமாடோ தலைமை நிர்வாக அதிகாரி தீபீந்தர் கோயல் ஒரு வலைப்பதிவு மூலம் அறிவித்தார். 

ஜொமாடோ அதன் சமீபத்திய நடவடிக்கைக்கு பல்வேறு உள்ளூர் மளிகைக் கடைகள் மற்றும் எஃப்எம்சிஜி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. ஜொமாடோ பயனர்கள் ஹோம்ஸ்கிரீனில் கிடைக்கும் ஜோமாடோ சந்தை பிரிவு வழியாகச் சென்று அதன் செயலியின் மூலம் மளிகை விநியோகத்தைப் பெறலாம். இது, முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 80-க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த சேவையை அறிவித்துள்ளது. 

ஸ்விக்கியும் நாட்டின் பல பகுதிகளில் மளிகை விநியோக சேவையை வழங்கத் தொடங்கியுள்ளது.  

பிக் பேஸ்கெட் மற்றும் க்ரோஃபர்ஸ் போன்ற ஆன்லைன் மளிகை விநியோக தளங்கள் இந்திய நுகர்வோரின் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதில் சவால்களை எதிர்கொள்கின்றன. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் நிறுவனங்களும் தங்கள் தளங்களில் இருந்து மளிகை மற்றும் வீட்டு அத்தியாவசிய ஏற்றுமதிகளை அதிகரிக்க கடுமையாக முயற்சி செய்கின்றன.

இறுதியாக, பேடிஎம்-மும் தனது செயலியின் மூலம் மளிகை பொருட்களை விற்பனை செய்யத் தொடங்கியது. மேலும், ஷாப் க்ளூஸ்-ம் அதன் தளத்தில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Zomato Market, Zomato, Swiggy, Shopclues, Paytm, grocery delivery
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.