எல்லைப் பகுதியான லடாக்கின் கால்வானில் கடந்த 15-ம்தேதி இந்தியா - சீனா ராணுவத்திற்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் சீன ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து சீனா முதலீடு செய்திருக்கும் நிறுவனமான ஜொமேட்டோவின் ஊழியர்கள் மேற்கு வங்கத்தில் ஜொமேட்டோ டி-ஷர்ட்டுகளை எரித்து போராட்டம் நடத்தினர்.
கொல்கத்தாவின் தெற்கில் இருக்கும் பெகாலா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. போராட்டத்தில் பங்கேற்ற சிலர் ஜொமேட்டோவை விட்டு விலகி விட்டதாகவும் கூறினர்.
மக்கள் சீன முதலீட்டு நிறுவனமான ஜொமேட்டோவில் இருந்து உணவு ஏதும் ஆர்டர் செய்யக் கூடாது என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர்.
சீனாவின் அலிபாபா நிறுவனத்துடைய பங்குதாரரான ஆன்ட் பைனான்சியல், கடந்த 2018-ல் ஜொமேட்டோ நிறுவனத்தில் 210 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்துள்ளது. சமீபத்தில் கூடுதலாக 150 மில்லியன் டாலரை ஆன்ட் பைனான்சியலிடம் இருந்து ஜொமேட்டோ பெற்றது குறிப்பிடத்தக்கது.
சீன நிறுவனங்களில் இந்தியர்களிடம் இருந்து லாபம் பெறுகின்றன. ஆனால் எல்லையில் சீன ராணுவம் இந்திய வீரர்களை கொல்கிறது.சீனா இந்தியாவை அபகரிக்கப் பார்க்கிறது. இதை அனுமதிக்க கூடாதென போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசினர்.
கடந்த மே மாதத்தில் ஜொமேட்டோ நிறுவனம் 520 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. கொரோனா பாதிப்பால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்