இந்து அல்லாத ஒருவர், தனக்கு உணவு டெலிவரி செய்யக்கூடாது என வாடிக்கையாளர் ஒருவர் எழுப்பிய புகார், மற்றும் அந்த புகாருக்கு ஜோமாட்டோ அளித்த பதில் ஆகியவை கடந்த புதன்கிழமையன்று டிவிட்டரை எட்டியுள்ளது. ஜோமாட்டோ நிறுவனம் செய்த ட்வீட்டில், "உணவுக்கு என தனியாக ஒரு மதம் இல்லை. இதுவே ஒரு மதம்.”, எனக் குறிப்பிட்டிருந்தது. ஜோமாட்டோ நிறுவனர் தீபீந்தர் கோயலும் அத்தகைய வாடிக்கையாளர்களின் வியாபாரத்தை இழப்பதில் ஜோமாட்டோ வருத்தப்படப்போவதில்லை என்று கூறியுள்ளார். பல ட்விட்டர் பயனர்கள் நிறுவனத்தின் முடிவைப் பாராட்டிய போதிலும், சில ட்விட்டர் பயனர்கள் ஜோமாட்டோவின் ட்வீட்டிற்கு எதிராகவும் பதில்கள் அளித்துள்ளனர்.
கடந்த செவ்வாயன்று ஒரு ஜோமாட்டோ வாடிக்கையாளர் ஜொமாடோவின் உணவு விநியோக சேவை மூலம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ததாக ட்வீட் செய்திருந்தார். தனது உணவை வழங்குவதற்காக "இந்து அல்லாத" டெலிவரி பாயை நியமித்ததற்காக இந்த டெலிவரியை ரத்து செய்ததாகவும் குறிப்பிட்ட்டிருந்தார். "ஒரு முஸ்லீம் ஊழியர் தனக்கு உணவு அளிப்பதை தான் விரும்பவில்லை" என்பதால் அந்த வாடிக்கையாளர் டெலிவரி பாயை மாற்ற ஜோமாட்டோவிடம் வேண்டியுள்ளார். அதற்கு அந்த நிறுவனம் டெலிவரி செய்பவர்களிடையே "பாகுபாடு பார்க்க வேண்டாம்" என பதிலளித்திருந்தது.
Food doesn't have a religion. It is a religion. https://t.co/H8P5FlAw6y
— Zomato India (@ZomatoIN) July 31, 2019
இந்த சம்பவம் குறித்து ஜோமாட்டோவின் நிறுவனர் கோயல்,"இந்தியாவின் சிந்தனை மற்றும் எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களின் பன்முகத்தன்மை குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்" என ட்வீட் செய்திருந்தார். "இம்மாதிரியான வாடிக்கையாளர்களிடமிருந்து வணிகத்தை இழப்பது குறித்து நாங்கள் வருத்தப்படவில்லை." என அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஜோமாட்டோ மற்றும் தீபீந்தர் கோயலின் பதில்கள் ட்விட்டர் பயனர்களிடமிருந்து ஏராளமான பாராட்டுக்களைப் பெற்றுள்ளன.
“சரியாக சொன்னீர்கள்! பெருகிவரும் வெறுப்பையும் மதவெறியையும் பகிரங்கமாக நிராகரிக்கும் பெருநிறுவனக் குரல்களைக் கண்டறிவது அரிது”என ஒரு பயனர் ட்வீட் செய்திருந்தார்.
"பாராட்டுகளைப். மிகச் சிலரே இந்தியாவின் சிந்தனைகளுக்கு துணை நிற்கிறார்கள். ஒரு இளம் & மிகவும் பிரபலமான தொழில்முனைவோர் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பது பாராட்டத்தக்கது!” என கோயலின் ட்விட்டிற்கு மற்றொருவர் பதில் கூறுகியிருந்தார்.
ஜோமாட்டோவின் ட்விட்டிற்கான பதில்களில் துரதிர்ஷ்டவசமாக ஆர்டரை ரத்து செய்த ஜொமாடோ வாடிக்கையாளருக்கு ஆதரவளிக்கும் கருத்துகளும் நிரம்பியிருந்தன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்