வாட்ஸ்அப்பின் புதிய `Together at home' ஸ்டிக்கர் பேக் அறிமுகம்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 22 ஏப்ரல் 2020 11:44 IST
ஹைலைட்ஸ்
  • வாட்ஸ்அப் புதிய ஸ்டிக்கர் பேக், சமூக தூரத்தை ஊக்குவிக்கிறது
  • ‘air high five’ & ‘குரூப் வீடியோ காலிங் சித்தரிக்கும் ஸ்டிக்கர்கள் உள்ளன
  • இந்த பேக் அரபு, பிரஞ்சு, ஜெர்மன் & இந்தி மொழிகளிலும் வருகிறது

வாட்ஸ்அப் ‘‘Together at Home’’ ஸ்டிக்கர் பேக் மருத்துவ ஹீரோக்களையும் கொண்டாடுகிறது

WhatsApp `Together at home' என்னும் புதிய ஸ்டிக்கர் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் உலகெங்கிலும் உள்ள மக்கள் அனுபவிக்கும் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த புதிய ஸ்டிக்கர்களை, உலக சுகாதார அமைப்புடன் (WHO) இணைந்து, வாட்ஸ்அப் இதை அறிமுகப்படுத்தியுள்ளது. 

25 WhatsApp Tricks to Help Master the Messaging App

வாட்ஸ்அப் ஒரு ‘ஏர் ஹை ஃபைவ்' மற்றும் ‘குரூப் வீடியோ காலிங்' ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஸ்டிக்கர்கள் மூலம் சமூக தூரத்தை ஊக்குவிக்கிறது. இந்த ஸ்டிக்கர் பேக்கில், ஓகே, கை கழுவுதல், வீட்டில் இருத்தல், வீட்டில் இருந்தே பணி புரிதல் போன்ற பல்வேறு ஸ்டிக்கர்கள் இடம் பெற்றுள்ளன. கோவிட்-19 நெருக்கடியின் போது மருத்துவ ஹீரோக்களையும் தனிப்பட்ட ஹீரோக்களையும் கொண்டாடும் ஸ்டிக்கர்கள் உள்ளன.

“Together at Home” ஸ்டிக்கர் பேக் வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டில் கிடைக்கிறது. பிறகு, சேட் பாக்ஸில் உள்ள ஸ்டிக்கர் ஆப்ஷன் சென்று இந்த பேக்கை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். வாட்ஸ்அப்பின் புதிய ஸ்டிக்கர்கள் ஆங்கிலம், அரபு, பிரஞ்சு, ஜெர்மன், இந்தோனேசிய, இத்தாலியன், போர்த்துகீசியம், ரஷ்ய, ஸ்பானிஷ் மற்றும் துருக்கிய மொழிகளில் கிடைக்கின்றன. இந்த புதிய ஸ்டிக்கர் பேக் மூலம், தொற்றுநோய்களின் போது இணைந்திருக்க கூடுதல் வழிகளை வாட்ஸ்அப் வழங்குகிறது.


Is iPhone SE the ultimate 'affordable' iPhone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp, WhatsApp Stickers, Coronavirus, cOVID 19
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டிசைனிங் கத்துக்கணுமா? அடோப் டூல்ஸ் இப்போ ஃப்ரீ! இந்திய மாணவர்களுக்கு 'அடோப்' தந்த செம்ம கிப்ட்
  2. WhatsApp குரூப்ல இப்போதான் சேர்ந்தீங்களா? கவலைப்படாதீங்க! பழைய 100 மெசேஜ்களை இனி நீங்க படிக்கலாம்
  3. ஜியோ ஹாட்ஸ்டார் சாட்ஜிபிடி வேற லெவல் என்டர்டைன்மென்ட்! இனி நம்ம ஊர் மொழியிலேயே பேசி படங்களைத் தேடலாம்
  4. சாட்ஜிபிடி இப்போ நம்ம காலேஜுக்குள்ளயே வந்துடுச்சு! 1 லட்சம் மாணவர்களுக்கு ஸ்பெஷல் கோர்ஸ்.. ஓபன் ஏஐ-யின் அதிரடி பிளான்
  5. டெல்லியில் 1,100-க்கும் மேற்பட்ட போலி நதிங், CMF பொருட்கள் பறிமுதல்! கூகுள் போல நதிங் நிறுவனமும் எச்சரிக்கை - முழு விவரம்
  6. இனி இன்டர்நெட் வேகம் வேற லெவல்ல இருக்கும்! கடலுக்கு அடியில் கூகுள் போடும் புதிய கேபிள் ரூட்கள்
  7. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜியோவின் மெகா கிப்ட்! ரூ.1457 பெனிபிட்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே
  8. Pixel 10a வந்தாச்சு மக்களே! தரமான கேமரா, வேற லெவல் பேட்டரி.. ஐபோனுக்கு செம்ம டஃப் கொடுக்கும் போலயே
  9. இனி டேட்டா கேபிள் தேவையில்லை! Pixel 9 போன் வச்சிருக்கீங்களா? ஐபோனுக்கு அசால்ட்டா ஃபைல் அனுப்பலாம்
  10. மே 19-ல் கூகுள் போடப்போகும் மெகா பிளான்! Android 17 முதல் Gemini AI வரை - முழு விபரம் இதோ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.