வாட்ஸ்-அப் நிறுவனம், சமூக வலைதள மார்க்கெட்டில் தொடர்ந்து முன்னணியில் இருக்க அதிரடி அப்டேட்களை ரிலீஸ் செய்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது மேலும் ஒரு கலக்கல் அப்டேட்-ஐ வெளியிட்டுள்ளது. இந்த புதிய அப்டேட்டின் மூலம், வாட்ஸ்-அப்பில் போடும் ஸ்டேட்டஸை, ஃபேஸ்புக்கில் பகிர முடியும். இந்த புதிய அட்டகாச அப்டேட், சோதனையில் இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில், பயனர்களின் பயன்பாட்டுக்கு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்-அப்பின் லேட்டஸ்ட் வெர்ஷனில் இந்த அப்டேட் இருப்பதை கேட்ஜெட்ஸ் 360 கண்டறிந்துள்ளது. சிலருக்கு மட்டும் இந்த அப்டேட் வேலை செய்யும் நிலையில், அனைத்துப் பயனர்களுக்கும் இது விரைவில் கிடைக்கும் என்று தெரிகிறது.
இந்த புதிய அப்டேட்டின்படி, வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைக்கும் இடத்திற்குக் கீழ், ‘ஷேர் டூ ஃபேஸ்புக் ஸ்டோரி' என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஒரே கிளிக்கில் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸை உங்களது முகநூல் பக்கத்தில் சுலபமாக பகிர்ந்துகொள்ள முடியும்.
இது குறித்து கேட்ஜெட்ஸ் 360, வாட்ஸ்-அப் நிறுவனத்திடம் தகவல் கேட்டது. அதையடுத்து, அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், புதிய அப்டேட் வந்துள்ளதை உறுதி செய்துள்ளார்.
இந்த புதிய அப்டேட் தங்களுக்கும் கிடைத்துள்ளதாக ட்விட்டர் பயனர்கள் பலர், ட்வீட்டியுள்ளனர். வாட்ஸ்-அப்பின் 2.19.258, ஆண்ட்ராய்டு வெர்ஷனிலும், 2.19.92 ஐபோன் வெர்ஷனிலும் அப்டேட் கிடைக்கிறது. அதேபோல ஸ்டேபிள் ஆண்ட்ராய்டு வெர்ஷன், v2.19.244 மற்றும் கரன்ட் பேடா வெர்ஷன், v2.19.262 ஆகியவற்றிலும் இந்த அப்டேட் இருப்பதைப் பார்க்க முடிந்தது.
ஃபேஸ்புக் ஷேரிங்கை தவிர்த்து இந்த புதிய அப்டேட்டின் மூலம் ஸ்டேட்டஸை, மற்ற செயலிகளிலும் பகிர்ந்து கொள்ளும்படி வசதி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதமே இந்த அப்டேட் குறித்து தகவல் கசிந்தது. சில வாட்ஸ்-அப் பயனர்கள் ஜூன் மாதத்தின் போது, இப்படியொரு அப்டேட் தங்களுக்கு வந்துள்ளதாக தெரிவித்தனர். இந்நிலையில், அனைவருக்கும் அது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்