வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம், தனது செயலியில் இயங்கும் குழுக்களுக்குப் பிரத்யேகமான சில அப்டேட்களை வெளியிட்டுள்ளது (Group Privacy Settings). இந்த அப்டேட் மூலம், உங்களை யாரெல்லாம் ஒரு புதிய குழுவில் சேர்க்கக் கூடாது என்பதை முடிவு செய்ய முடியும். இந்த அப்டேட் சில நாட்களுக்கு முன்னர், ஐபோன்களுக்கு மட்டும் விடப்பட்டது. தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் அது வெளிவந்துள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் குழு பிரைவசி அமைப்புகளிலும் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னர் வாட்ஸ்அப் குழுக்களில், Who Can Add Me to Groups என்ற ஆப்ஷனுக்குக் கீழ் Nobody என்பது மட்டும்தான் இருக்கும். தற்போது, My Contacts Except என்கிற இன்னொரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த அப்டேட் மூலம், எந்த நபர் உங்களை இன்னொரு குழுவுக்கு அழைக்க கூடாது என்பதை தேர்வு செய்ய முடியும். யாருமே, உங்களை ஒரு புதிய வாட்ஸ்அப் குழுவுக்கு அழைக்கக் கூடாது என்று நினைத்தால், “Nobdy” என்பதை தேர்வு செய்யலாம். அதே நேரத்தில், My Contacts Except என்பதை தேர்வு செய்தால், யாரெல்லாம் இன்னொரு குழுவுக்குள் உங்களை சேர்க்கக் கூடாது என்பதை முடிவு செய்யலாம்.
இப்படி, இந்த புதிய வசதியைப் பயன்படுத்தி, சிலரை நீங்கள் தள்ளி வைத்த பின்னரும், அவர்கள் உங்களை ஒரு புதிய வாட்ஸ்அப் குரூப்பில் சேர்க்க வேண்டும் என்று நினைத்தால், அவர்களின் இன்வைட் உங்களுக்கு தனிப்பட்ட முறையில்தான் வரும். 3 நாட்களுக்குள் அந்த விண்ணப்பித்திற்கு நீங்கள் பதில் அளிக்கவில்லை என்றால், அது காலாவதியாகும். ஒரு குழுவில் நீங்கள் இணைய வேண்டுமா, வேண்டாமா என்கிற தேர்வு செய்யும் வாய்ப்பை இது தரும்.
வாட்ஸ்அப் குழுக்கள் பற்றி பல புகார்கள் வந்ததைத் தொடர்ந்து அந்நிறுவனம், பல புதிய அப்டேட்களில் வேலை செய்தது. அதன் தொடர்ச்சியாகவே இப்படிப்பட்ட புதிய அப்டேட்கள் வந்து கொண்டிருக்கின்றன.
வாட்ஸ்அப்பின் இந்த புதிய வசதிகள் உங்கள் போனில் வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதன் லேட்டஸ்ட் வெர்ஷனை டவுன்லோடு செய்துவிட்டு செயல்படுத்திப் பார்க்கவும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்