இந்திய அளவில் சாட்டிங்கிற்கு பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ்-அப்பிற்கு தனி இடம் உள்ளது. முதலில் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் வாட்ஸ்-அப் செயலியை வடிவமைத்து வெளியிட்டது. குறைந்த காலத்தில் இதன் பிரமாண்ட வீச்சைப் பார்த்த ஃபேஸ்புக் நிறுவனம், வாட்ஸ்-அப்பை ஒரே செக்கில் தன் வசம் ஆக்கியது. தற்போது ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அங்கமாக வாட்ஸ்-அப் செயல்பட்டு வருகிறது.
வாட்ஸ்-அப் செயலி, ஃபேஸ்புக் நிறுவனத்தின் கீழ் சென்றதில் இருந்து பலப் புதிய அப்டேட்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறது. அந்த வரிசையில் ஆண்ட்ராய்டு போன்களில் பயன்படுத்தப்படும் வாட்ஸ்-அப் செயலிக்கு புதிய அப்டேட் ஒன்று கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய அப்டேட்டின் மூலம், 'ஃபார்வர்டட் மெசேஜ்' லேபல், அனுப்பும் தகவலுக்கு மேல் வரும். ஒருவர் அனுப்பிய செய்தியை மற்றவருக்கு அப்படியே அனுப்பினால் அதுதான் ஃபார்வர்டட் மெசேஜ். இப்படி அனுப்பும் தகவல்களுக்கு மேலேதான், ஃபார்வர்டட் மெஸேஜ் என்ற லேபல் வந்துவிடும். இதன் மூலம் எது நாம் மற்றவர்களிடமிருந்து அனுப்புவது, எது நாம் சுயமாக எழுதி அனுப்புவது என்று பகுப்பாய்ந்து கொள்ள முடியும். இதில் ஒரு சின்ன பின்னடைவும் இருக்கிறது. இந்த அப்டேட்டை தரவிறக்கம் செய்த பின்னர், 'ஃபார்வர்டட் மெஸேஜ்' லேபல் வேண்டாம் என்று முடிவெடுத்தாலும், அதை போக்குவதற்கு அமைப்புகளில் வழி இல்லை.
சிறிது காலத்துக்கு முன்னர் தான், வாட்ஸ்-அப் நிறுவனம், 'மீடியா விசிபிலிட்டி ஃபீச்சர்'-யைப் பார்க்க அல்ல மறைக்க ஏதுவாக ஒரு அப்டேட்டை வெளியிட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு அப்டேட்-ஐ வாட்ஸ்-அப் ரிலீஸ் செய்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்