இந்த பிரபலமான அம்சம் வாட்ஸ்அப்பில் மீண்டும் வந்தது! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 21 மே 2020 12:45 IST
ஹைலைட்ஸ்
  • புதிய அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா v2.20.166-ல் காணப்படும்
  • இப்போது பயனர்கள் வாட்ஸ்அப்பில் 30 விநாடிகள் வரை வீடியோ ஸ்டேட்டஸ் வைக்கலாம
  • இந்த அம்சம் வெளியீடு பற்றி எந்த வார்த்தையும் இல்லை

ஆண்ட்ராய்டு பீட்டா 2.20.166-க்கான வாட்ஸ்அப் அதிகரித்த வீடியோ ஸ்டேட்டஸ் வரம்பைக் கொண்டுவருகிறது

வீடியோ ஸ்டேட்டஸ் காலக்கெடுவை WhatsApp மீண்டும் திருத்தியுள்ளது. நீங்கள் இப்போது 30 வினாடிகள் வரை வீடியோக்களை தங்கள் ஸ்டேட்டஸில் பதிவேற்றலாம். மார்ச் மாதத்தில், வாட்ஸ்அப் இந்திய பயனர்களுக்கு வீடியோ ஸ்டேட்டஸை 15 வினாடிகளாக குறைத்தது. இது ஊரடங்கு நேரத்தில் வாட்ஸ்அப்பின் சேவையகங்களில் சுமையை குறைக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இந்த முடிவு இப்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.

WhatsApp No Longer Lets You Share Videos Longer Than 15 Seconds as Status in India

Advertisement

வீடியோ ஸ்டேட்டஸ் 30 விநாடிகள் வரை பதிவேற்றுவதற்கான தகவல் முதலில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா v2.20.166 பதிப்பில் WABetaInfo-ஆல் காணப்பட்டது. இந்த அம்சம் இப்போது அனைத்து பயனர்களுக்கும் சமீபத்திய அப்டேட்டுகளுடன் தெரியும். கூகுள் பயனர்களின் அடிப்படையில் இந்த வாட்ஸ்அப் அப்டேட்டை வெளியிடக்கூடும் என்ற தகவலையும் இந்த அறிக்கை வழங்குகிறது. அதை நீங்கள் உடனடியாக பிளே ஸ்டோரில் பார்க்க முடியாது.

WhatsApp Web: Everything You Need to Know

நீங்கள் சமீபத்திய பீட்டா அப்டேட்டை பதிவிறக்கும் போது 30 வினாடிகள் மட்டுமே வீடியோவைப் பதிவேற்ற முடியும் என்றும் WABetaInfo கூறியுள்ளது. பயனர்கள் APKMirror மூலம் சமீபத்திய பீட்டாவையும் அப்டேட் செய்ய முடியும்.

Advertisement

சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா 2.20.166-ஐ இன்ஸ்டால் செய்த பின், பயனர்கள் தங்கள் வீடியோவை 30 விநாடிகள் வரை பதிவேற்ற முடியும். இந்த அம்சம் நிலையான பதிப்பில் எப்போது வெளியிடப்படும் என்பது தெரியவில்லை.


In 2020, will WhatsApp get the killer feature that every Indian is waiting for? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp, WhatsApp for Android, WhatsApp Status, Video status
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.