'டார்க் மோட்'-ஐ தொடர்ந்து புதிய அப்டேட்டை கொண்டுவருகிறது வாட்ஸ்அப்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 16 மார்ச் 2020 11:12 IST
ஹைலைட்ஸ்
  • வாட்ஸ்அப் self-destructing செய்திகளின் ஆப்ஷனை கொண்டுவருகிறது
  • சமீபத்திய பீட்டா பதிப்பு செய்திகளுக்கு சில காலாவதி காலங்களை வழங்குகிறது
  • வாட்ஸ்அப், இந்த அம்சத்தை ஆரம்பத்தில் group chats-க்கு கொண்டு வரவுள்ளது

self-destructing செய்திகளை இயக்குவதற்கான வாட்ஸ்அப்பின் ஆப்ஷன் பீட்டா பதிப்புகள் 2.20.83 மற்றும் 2.20.84-ல் தோன்றும்

Photo Credit: WABetaInfo

பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்காக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'டார்க் மோட்' அம்சத்தை அறிமுகப்படுத்திய பின்னர் இப்போது ஒரு புதிய அம்சத்தில் செயல்படுவதாக கூறப்படுகிறது. இது பயனர்கள் நிர்ணயித்த நேரத்திற்குப் பிறகு தானாகவே செய்திகளை நீக்கும். இந்த அம்சம் இயல்பாகவே முடக்கப்பட்டுள்ளது, பயனர்களால் இன்னும் அணுக முடியவில்லை

வாட்ஸ்அப்பின் 2.20.83 மற்றும் 2.20.84 ஆகிய இரண்டு ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்புகளில், private chats-ல் self-destructing செய்திகளை அமைப்பதற்கான ஆப்ஷன் கண்டறியப்பட்டது. மேலும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு நாள், ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு இடையில் செய்திகளின் காலாவதி காலத்தை ஒருவர் தேர்வு செய்யலாம் என்று WABetaInfo சனிக்கிழமை தெரிவித்துள்ளது. 

இருப்பினும், புதிய அம்சம் எப்போது நிலையான பதிப்பில் இருக்கும் என்பது தற்போது தெரியவில்லை. ஆனால், டெவலப்பர்களின் குழு, இந்த அம்சத்தில் செயல்படுகிறது என்பதற்கான அறிகுறியாகும்.

வாட்ஸ்அப்பில் self-destructing செய்திகள் ஆப்ஷன் இருப்பதாகத் தெரிகிறது
 

சமீபத்திய அறிக்கையின்படி, இந்த அம்சம் ஆரம்பத்தில் group chats-க்கு மட்டுமே கிடைக்கும், மேலும் குழுவின் நிர்வாகிகளால் இதை இயக்க முடியும். இயக்கப்பட்டதும், அம்சத்தை (Contact Info) அல்லது (Group Settings)-ல் மாற்றலாம்.

அது கிடைத்ததும், வாட்ஸ்அப் நீக்குதல் செய்திகளின் (delete messages) அம்சம் ஒரு ஆன்/ஆஃப் பொத்தானைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், செய்திகள் தானாக மறைய - ஒரு மணிநேரம், ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் அல்லது ஒரு வருடம் - என்று பயனர்கள் குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்யலாம்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp, WhatsApp Beta
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஆப்பிளின் அதிக விலையுள்ள மடிக்க முடியாத போனாக ஐபோன் 18 புரோ மேக்ஸ் வரலாம்: கசிவு தகவல்!
  2. விரிவாக்கப்பட்ட தரவு பரிமாற்ற ஆதரவுடன் ஐபோனில் இருந்து மாறுவதை எளிதாக்குகிறது 'ஆண்ட்ராய்டு 17'
  3. 2026-இல் உங்கள் ஏர்டெல் இ-சிம்மை (Airtel eSIM) செயல்படுத்துவது எப்படி: படிப்படியான வழிகாட்டி
  4. இந்தியாவில் அறிமுகமாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக 'ஒன்பிளஸ் N6x' பேட்டரி திறன் வெளிப்படை
  5. வாட்ஸ்அப் ஐஓஎஸ் தளத்தில் புதிய உருண்டையான செய்தி குமிழி வடிவமைப்பை அறிமுகப்படுத்துகிறது: அறிக்கை
  6. ஆப்பிள் ஹெல்த், மருத்துவப் பதிவுகளுடன் தனிப்பயன் பதில் தர ஓபன்ஏஐ 'சாட்ஜிபிடி ஹெல்த்' அறிமுகம்!
  7. iQOO Z11 Lite 5G vs Moto G37 Power vs Oppo K14x 5G: இந்தியாவில் விலை, அம்சங்கள் ஒப்பீடு
  8. 50-மெகாபிக்சல் கேமரா, 6,500mAh பேட்டரியுடன் iQOO Z11 Lite இந்தியாவில் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  9. மோட்டோ பேட் 70 ஆகஸ்ட் 9ல் இந்தியாவில் அறிமுகம்; டைமன்சிட்டி 6400, 10,200mAh பேட்டரியுடன் வருகிறது!
  10. வாட்ஸ்அப் இருபடிச் சரிபார்ப்பு(Two-Step Verification) PINக்கு பதிலாக வலுவான பாஸ்வேர்டை அறிமுகப்படுத்தக்கூடும்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.