ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டா புதிய பதிப்பைப் பெற்றுள்ளது, இது டார்க் தீமிற்கான கூடுதல் 'சாலிட் கலர்' ஆப்ஷன்களைக் கொண்டுவருகிறது. உடனடி செய்தியிடலில் சாலிட் உள்ள கலர் ஆப்ஷன்கள் பயனர்கள் default light-colour background வடிவத்தை தங்கள் ஆப்ஷன்களில் சில சாலிட் வண்ணங்களுடன் மாற்ற அனுமதிக்கின்றன. புதிய பீட்டா அப்டேட் பதிப்பு 2.20.60-ஐக் கொண்டுள்ளது மற்றும் கூகுள் பிளே பீட்டா திட்டத்தின் வழியாக பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. வாட்ஸ்அப் முதலில் ஜனவரி மாதத்தில் 2.20.31 பதிப்பைக் கொண்டுவந்தது, இது டார்க் தீமில் பயனர்களுக்கு ஆறு சாலிட் கலர் ஆப்ஷன்களைச் சேர்த்தது. பீட்டா பதிப்புகள் சோதனை நோக்கங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளதால், மாற்றங்களை அனுபவிப்பதற்காக சமீபத்திய அப்டேட்டைப் பதிவிறக்குவது குறித்து பரிந்துரைக்கப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தும்போது சில பிழைகளை நீங்கள் அனுபவிக்கலாம்.
ஆண்ட்ராய்டுக்கான WhatsApp பீட்டாவின் ஜனவரி அப்டேட், ஆரம்பத்தில் ஆறு சாலிட் கலர் ஆப்ஷன்களைக் கொண்டுவந்தாலும், புதிய அப்டேட் 27 எண்ணாக விரிவுபடுத்துகிறது. இதன் பொருள் டார்க் தீம் பயன்படுத்தும் போது நீங்கள் அப்லே செய்ய கூடுதலாக 'சாலிட் கலர்' ஆப்ஷன்களின் வரம்பைப் பெறுவீர்கள்.
குறிப்பாக, பொது மக்களுக்குக் கிடைக்கும் ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப்பில் (WhatsApp for Android) மொத்தம் 27 சாலிட் கலர் ஆப்ஷன்கள் உள்ளன, ஆனால் அவை தற்போது பீட்டா பதிப்புகளுக்கு மட்டுமே டார்க் தீம் வழங்கப்படுகின்றன.
உங்கள் சாதனத்தில் புதிய அளவிலான சாலிட் கலர் ஆப்ஷன்களை அனுபவிக்க, நீங்கள் வாட்ஸ்அப் பீட்டா பதிப்பு 2.20.60-ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும். நீங்கள் Google Play Beta programme-ல் பதிவுசெய்து, பின்னர் Google Play Store-ல் இருந்து நேரடியாக சமீபத்திய அப்டேட்டை இன்ஸ்டால் செய்யலாம். மாற்றாக, நீங்கள் APK மிரரில் இருந்து செயலியை சைட்லோட் செய்யலாம்.
அப்டேட்டை நீங்கள் பதிவிறக்கம் செய்தவுடன், உங்கள் வாட்ஸ்அப்பில் இருந்து Settings > Chats > Wallpaper > Solid Color செல்வதன் மூலம் கிடைக்கக்கூடிய சாலிட் கலர் ஆப்ஷன்களை பார்க்கலாம்.
குறிப்பிட்டுள்ளபடி, பீட்டா அப்டேட்டுகள் சோதனை நோக்கங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, கூடுதல் சாலிட் கலர் ஆப்ஷன்களை மட்டுமே நீங்கள் அனுபவிக்க விரும்பினால் புதுப்பிக்கப்பட்ட வாட்ஸ்அப் பதிப்பை இன்ஸ்டால் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
வாட்ஸ்அப் பீட்டா வாட்சர் WABetaInfo ஆரம்பத்தில் சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா அப்டேட் குறித்து அறிக்கை அளித்தது. இருப்பினும், கேஜெட்ஸ் 360 அதன் அறிமுகத்தை சுயாதீனமாக சரிபார்க்கவும், சாலிட் கலர் ஆப்ஷன்களில் செய்யப்பட்ட மாற்றங்களைக் காணவும் முடிந்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்