கொரோனா வைரஸ் உதவி எண்கள் வாட்ஸ்அப்பில் அறிமுகம்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 3 ஏப்ரல் 2020 11:29 IST
ஹைலைட்ஸ்
  • வாட்ஸ்அப்பில் கொரோனா வைரஸ் ஹெல்ப்லைன் தற்போது ஆங்கிலத்தில் கிடைக்கிறது
  • வாட்ஸ்அப் பயனர்கள் ஹெல்ப்லைன் மூலம் சோதனை வசதிகளை சரிபார்க்கலாம்
  • வைரஸ் சாட்போட் ஊரடங்கு உத்தரவுகளைப் பெறுவதற்கான அணுகலை வழங்குகிறது

சமீப காலங்களில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பல்வேறு சாட்போட்களை வாட்ஸ்அப் சேர்த்தது

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துகொள்ள மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதைத் தொடர்ந்து, கொரோனா வைரஸ் பற்றிய உடனடி தகவல்களைப் பெறும் வகையில் டெல்லி அரசு, வாட்ஸ்அப்பில் தங்கள் உதவி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. COVID-19 வைரஸ் தொடர்பான முக்கிய அறிகுறிகள் மற்றும் விவரங்களைப் பெற பயன்படுத்தலாம். இந்த உதவி எண்கள், ஒரு சாட்போட் சேவையாக கிடைக்கிறது. 


இதை பயன்படுத்துவது எப்படி? 

உங்கள் போனில் +91 88000 07722 என்ற எண்ணைச் சேமிக்க வேண்டும். 
பிறகு, WhatsApp-ல் ‘ஹாய்' என்ற செய்தியை அனுப்ப வேண்டும். 
இதன் மூலம், டெல்லி மக்கள் சாட்போட் சேவையை அணுகலாம். 
இந்த உதவி எண்கள் ஆங்கிலத்தில் விவரங்களை வழங்குகிறது.

Novel Coronavirus (SARS-Cov-2) நோய்க்கான அரசு அங்கீகாரம் பெற்ற சோதனை வசதிகள் குறித்த விவரங்களைப் பெற சாட்போட் சேவையை அணுகலாம். இந்த போட் டெல்லியில் இருக்கும் இரவு தங்குமிடங்களைப் பற்றிய தகவல்களையும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு எவ்வாறு நன்கொடை அளிப்பது என்ற அணுகலை வழங்குகிறது. டெல்லி அரசு வாட்ஸ்அப்பில் தனது கொரோனா வைரஸ் ஹெல்ப்லைன் மூலம் ஆப்ஷன்களின் பட்டியலை வழங்கியுள்ளது.

டெல்லி அரசு வாட்ஸ்அப்பில் தனது கொரோனா வைரஸ் ஹெல்ப்லைன் மூலம் ஆப்ஷன்களின் பட்டியலை வழங்கியுள்ளது.

"ஊரடங்கு காலத்தில் மக்களை பாதுகாப்பாக இருக்க, அவர்களை வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்துகிறோம். மேலும், அவர்கள் சரிபார்க்கப்பட்ட தகவல்களின் சேனல்களை மட்டுமே நம்பியுள்ளனர் " என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். க்ளவுட் தொடர்பு தளமான Infobip-ஐ பயன்படுத்தி சாட்போட் உருவாக்கப்பட்டது. இது WhatsApp Business ஏபிஐ-ல் உருவாக்கப்பட்டது.

நாட்டின் பல மாநிலங்கள், கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை வழங்க சாட்போட் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. 

சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தொடர்பு எண்கள்:

மகாராஷ்டிரா - (+91 20 2612 739), 
குஜராத் - (+91 74330 00104) மற்றும் 
கேரளா - (+91 90722 20183) என்ற எண்ணில் வாட்ஸ்அப்பில் அணுகலாம். 

Advertisement

வாட்ஸ்அப் சமீபத்தில் Coronavirus Information Hub-ஐ அறிமுகப்படுத்தியது. இதில் வைரஸ் பற்றிய தவறான தகவல்களைத் தடுக்க உதவும் வகையில் 1 மில்லியன் நன்கொடை அறிவித்தது. இந்திய அரசு தனது கொரோனா வைரஸ் உதவி எண்ணை Telegram channel மற்றும் Facebook bot மூலம் கொண்டு வந்தது. 


How are we staying sane during this Coronavirus lockdown? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.