WhatsApp Update: புதிய ஸ்டிக்கர்கள், அனிமேஷன்கள், குரூப் கால் ரிங்டோன் அறிமுகம்

WhatsApp Update: புதிய ஸ்டிக்கர்கள், அனிமேஷன்கள், குரூப் கால் ரிங்டோன் அறிமுகம்

வாட்ஸ்அப் v2.20.198.11 பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வரும் அம்சங்கள்

ஹைலைட்ஸ்
  • The new WhatsApp call UI tweaks are still under development
  • The new group call ringtone should be available for all on the new beta
  • WhatsApp is also allowing animated stickers to loop at most eight times
விளம்பரம்

வாட்ஸ்அப்பில் புதிதாக ஸ்டிக்கர்கள், அனிமேஷன்கள் உள்ளிட்ட அம்சங்கள் வரவுள்ளன. 

வாட்ஸ்அப்பில் வரக்கூடிய அப்டேட்டுக்கள் எல்லாம், வாட்ஸ்அப் பீட்டா பதிப்பகத்தில் முன்கூட்டியே சோதனை முயற்சி செய்யப்படும். வாட்ஸ்அப் பீட்டாவை பின்தொடரும் WABeta தளம், வாட்ஸ்அப் அப்டேட்டுக்களை உடனுக்குடன் வழங்கும்.

அந்த வகையில், தற்போது வாட்ஸ்அப்பில் புதிதாக பல்வேறு அம்சங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் பீட்டா மூலம் தெரிகிறது. அதன்படி, குரூப் ரிங்டோன், புதிய அனிமேஷன் ஸ்டிக்கர்கள் வந்துள்ளன. இந்த அம்சங்கள் வாட்ஸ்அப் v2.20.198.11 பீட்டா வெர்ஷனில் சோதனை முயற்சியில் உள்ளன.

இதன்மூலம் இனி வாட்ஸ்அப் சாட்டில் அதிகப்படியான ஸ்டிக்கர்களை அனுப்ப முடியும். மேலும், ஒவ்வொரு குரூப்புக்கும் தனித்தனியாக ஒரு ரிங்டோன் வைத்துக்கொள்ள முடியும். இந்த வசதிகள் இன்னும் ஒருசில வாரங்களில் ஆண்ட்ராய்டு பதிப்பில் அப்டேட் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுதொடர்பான படங்களை WABetaInfo இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மேற்கண்ட அம்சங்கள் ஆண்ட்ராய்டுக்கான WhatsApp v2.20.198.11 பீட்டா பதிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.  

whatsapp android ui WhatsApp

வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர் வசதி
Photo Credit: WABetaInfo


இதற்கு முன்பு வாட்ஸ்அப் கால் செய்வதற்கான UI அப்டேட்டுக்கள் கொண்டு வரப்பட்டன. அதாவது எளிதாக, உடனடியாக வாட்ஸ்அப்பில் கால் செய்யும் வகையில் காட்சி அமைப்புகள் மாற்றப்பட்டன. அதே போல், ஆடியோ தரமும் உயர்த்தப்பட்டது. 


In 2020, will WhatsApp get the killer feature that every Indian is waiting for? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »