இனி ஆண்ட்ராய்டு போன்களிலும் ஸ்டிக்கர்கள்! - வாட்ஸ்ஆப் அறிவிப்பு

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 26 அக்டோபர் 2018 15:55 IST
ஹைலைட்ஸ்
  • ஆண்ட்ராய்டு 2.18.329 பீட்டா வெர்ஷன் வாட்ஸ் அப் ஸ்டிக்கர்களுடன் வருகிறது.
  • ஐபோனில் வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களும் ஸ்டிக்கர்களை பெற முடியும்.
  • ஸ்டிக்கர்களை டவுன்லோட் செய்வதற்கென்று தனிப்பட்ட ஸ்டிக்கர் ஸ்டோர் உள்ளது.

வாட்ஸ்ஆப் மூலம் இனி ஸ்டிக்கர்களை அனுப்பலாம்.

 

வரும் வாரங்களில் ஐபோனை போன்று ஆண்ட்ராய்டு போன்களிலும் ஸ்டிக்கர்களை கொண்டு வரப்போவதாக, இன்று அறிவித்துள்ளது. ஐபோன் வெர்ஷன் 2.18.100ல் இந்த அம்சத்தை காணமுடியும். ஆனால், வி2.18.327ல் அந்த வசதி இல்லை. 

மேலும் பயனாளர்கள் தங்களுக்கு பிடித்தமான ஸ்டிக்கர்களை எப்படி உருவாக்கலாம் என்பது குறித்தும் விளக்கியுள்ளது. நீங்கள் பொறுமையற்றவராக இருந்தால், ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.18.329 வாட்ஸ் அப்-ஐ முயற்சி செய்து பாருங்கள். எங்களால் வி2.18.330-ல் இந்த வசதியை காண முடிந்தது. 

பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த வாட்ஸ் அப் ஸ்டிக்கரின் அறிமுகம் சில பல வதந்திகளுக்கு பிறகு தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டிக்கர்களை தாங்களே கொடுக்காமல் பயனாளர்களுக்கு தேவையான ஸ்டிக்கர்களை அவர்களே இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளும்படி வாட்ஸ் அப் திட்டமிட்டுள்ளது. 

12 ஸ்டிக்கர் பேக்குகளை வாட்ஸ் அப் கொடுக்கிறது. அதற்கு மேலும் ஸ்டிக்கர்கள் வேண்டுமென்று விரும்புவர்கள் கூகுள் பிளேயிலிருந்து ஸ்டிக்கர் பேக்குகளை டவுன்லோட் செய்து கொள்ளலாம். ஸ்மார்ட்போனில் ஸ்டிக்கர்களை டவுன்லோட் செய்ததும், வாட்ஸ் அப் வெப்பிலும் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். 

Advertisement

வாட்ஸ் அப்பில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தகவல்களை பறிமாறிக் கொள்வதை அனைவரும் விரும்பக் கூடிய ஒன்றாக மாற்ற, இமோஜி, கேமிரா ஃபீச்சர்ஸ்லிருந்து ஸ்டேட்டஸ் மற்றும் அனிமேட்டட் ஜிஃப் போன்ற புதிய வசதிகளை கொடுக்க வாட்ஸ் அப் முயற்சித்து வருகிறது. 

இன்று பயனாளர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்த ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்வதில் மிகவும் உற்சாகமாக உள்ளோம் என்று தங்களது வலைப்பதிவில் வாட்ஸ் அப் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். 

ஸ்டிக்கர் ஸ்டோருக்கு சென்று உங்களுடைய சாட்டிற்கு தேவையான ஸ்டிக்கர் எது என்பதை தேர்வு செய்ய ஸ்டிக்கர் ஸ்டோருக்கு செல்லலாம். இதற்கு முன் பயன்படுத்திய ஸ்டிக்கர்களை பற்றி தெரிந்து கொள்ள ஹிஸ்டரி டேப் உள்ளது. உங்களுக்கு மிகவும் விருப்பமான ஸ்டிக்கர்களை ஸ்டார் குறியீடு கொடுத்து தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். 

Advertisement

நீங்கள் டவுன்லோட் செய்த ஸ்டிக்கர் பேக் தேவையில்லை என்றால் மை ஸ்டிக்கர் டாப்பிலிருந்து நீக்கி விடலாம். பயனாளர்கள் வாட்ஸ் அப்பில் தங்களுக்கு விருப்பமான ஸ்டிக்கர் அப்களை உருவாக்கி கொள்ளலாம். அதை எவ்வாறு செய்ய வேண்டுமென்பது குறித்த விளக்க குறிப்பை வாட்ஸ் நிறுவனத்தினர் கொடுத்துள்ளனர்.
 

 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp stickers, WhatsApp for Android, WhatsApp for iPhone, WhatsApp
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.