உபெர் கிப்டு கார்டுகள், உபெர் ரைட் மட்டுமின்றி உபெர் ஈட்ஸ்லும் தற்போது பயன்படுத்தி கொள்ளலாம். 500 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை உபெர் கிப்டு கார்டு பெற்றுக் கொள்ளலாம். பேடிஎம், வூஹூ ஆகிய ஆப் மூலம் பெறலாம்.
உபெர் கிப்டு கார்டு பயன்படுத்த, ஆப் சென்று பேமெண்ட் ஆப்ஷனில், கிப்டு கார்டு தேர்ந்தெடுக்கவும். பின்னர் கிப்டு கார்டு மதிப்பை பயன்படுத்தலாம்.
இந்த கிப்டு கார்டுகள் 500, 1000, 2000, 3000, 5000, 10,000 ரூபாய் மதிப்பில் வாங்கலாம். மேலும், கேஷ் பேக் போன்ற தள்ளுபடி உள்ளதாக உபெர் நிறுவனம் அறிவித்துள்ளது. உபெர் கிப்டு கார்டு ஆக்டிவேட் செய்ததில் இருந்து 36 மாதங்களுக்கு பயன்படுத்தலாம். உபெர் ரைட்ஸ், உபெர் ஈட்ஸில் பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்