ஜூன் 8, உலக கடல் தினம். கொண்டாடப்படும் அளவிற்கு கடல் ஒன்று அவ்வளவு மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் இல்லை. ஒருபுறம், கடலின் நீர் வருடத்திற்கு வருடம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதன் பின்னணி என்னவென்று பார்த்தால், மற்றொருபுறம், கடலில் நாம் குப்பையை கொட்டும் பிளாஸ்டிக்கின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
பிளாஸ்டிக், வெப்பம் இரண்டினாலும் கடல் உயிரினங்கள் கொத்துக் கொத்தாக இறந்து கொண்டிருக்கிறது. இவற்றை சரி செய்ய நாம் பிளாஸ்டிக் குப்பைகளை கடலில் கொட்டுவதை நிறுத்தினால் மட்டும் போதாது. முன்பு கடலில் கொட்டிய குப்பைகளையும் அகற்ற வேண்டும். அடிடாஸ், ரன்டேஸ்டிக் மற்றும் பார்லே கடல் பள்ளி, இவை மூன்றும் இணைந்து கடலை சுத்தம் செய்யவுள்ளது. நீங்கள் உட்ற்பயிற்சி செய்தபடியே இந்த பணியில் பங்கேற்கலாம். எப்படி, வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்!
பார்லே கடல் பள்ளி (Parley Ocean School) கடலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அடிடாஸ் (Adidas) நிறுவனம் இந்த பணிக்காக, நீங்கள் நடக்கும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 1 டாலரை பார்லே கடல் பள்ளிக்கு அளிக்கவுள்ளது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், 'ரன்டேஸ்டிக்' (Runtastic) செயலியை பயன்படுத்தி உங்கள் நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டியதுதான்.
'ரன் பார் தி ஓசன்' (Run for the Ocean) என்ற இந்த திட்டம், ஜூன் 8-ஆம் தேதியான 'உலக கடல் தினம்' (World Oceans Day) அன்று துவங்கியது. ஜூன் 16 தேதி வரை நடக்கவுள்ள இந்த நிகழ்வில் நீங்கள் நடக்கும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் அடிடாஸ் நிறுவனம் ஒவ்வொரு டாலரை இந்த கடல் பள்ளிக்கு வழங்கும்.
இதில் நீங்கள் எப்படி பங்கேற்பது?
1. முதலில் 'ரன்டாஸ்டிக்' செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் டவுன்லோட் செயுங்கள்.
2. பின் அந்த செயலியில் 'புரோகிரஸ்' (Progress) பகுதிக்கு செல்லுங்கள்.
3. அங்கு சவால்கள் (Challenges) பகுதியில் 'ரன் பார் தி ஓசன்' சவாலை தேர்வு செய்யுங்கள்.
4. பின் ஜூன் 8 முதல் ஜூன் 16-ஆம் தேதி வரை நீங்கள் செய்யும் ஒவ்வொரு கிலோமீட்டர் நடைபயிற்சிக்கும், ஒவ்வொரு டாலர் கடலின் சுத்தம் செய்யும் பணி செல்லும்.
சென்ற ஆண்டு ஜூன் மாதத்தின் 8-ஆம் தேதியின் உலக கடல் தினத்தின் போதும், இதே போல 'ரன் பார் தி ஓசன்' நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்வில் 13 முக்கிய நாடுகளிலிருந்து, 924,237 பேர் பங்கேற்றனர். இவர்கள் இந்த நிகழ்வின்போது ஓடிய தூரம் மட்டும் 12,402,854 கிலோமீட்டர்கள்.
கடந்த முறை நீங்கள் பங்கேற்க தவறினால், இம்முறை பங்கெடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஒரு கிலோமீட்டர் நடைபயிற்சி பயணம், எங்கோ கடலில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு பிளாஸ்டிக் துண்டை அகற்ற உதவலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்