ஜனவரி 6-க்கு ரெடியா இருங்க! 7000mAh பேட்டரி + 200MP கேமரான்னு Realme 16 Pro+ மரண மாஸா வருது

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 30 டிசம்பர் 2025 11:35 IST
ஹைலைட்ஸ்
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் மற்றும் 1.44 மில்லியன் அன்டுடு
  • 7000mAh மெகா பேட்டரி மற்றும் 80W அதிவேக சார்ஜிங் வசதி
  • 200MP மெயின் கேமராவுடன் மீண்டும் களமிறங்கும் 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ

2026-ன் ஆரம்பமே அதிரடியா இருக்கப்போகுது. ஏன்னா, நம்ம ரியல்மி நிறுவனம் அவங்களோட மோஸ்ட் எக்ஸ்பெக்டட் Realme 16 Pro+ போனோட ஸ்பெக்ஸை அதிகாரப்பூர்வமா கன்பார்ம் பண்ணிட்டாங்க. லான்ச்சுக்கு முன்னாடியே இதோட பவரை பார்த்தா மத்த பிராண்ட்ஸ்க்கு எல்லாம் இப்போவே நடுக்கம் ஆரம்பிச்சிருக்கும். இந்த போன்ல Snapdragon 7 Gen 4 சிப்செட் இருக்குறது இப்போ உறுதியாகிடுச்சு. இதோட அன்டுடு (AnTuTu) ஸ்கோர் சும்மா மிரட்டுதுங்க.. சுமார் 1.44 மில்லியன் ஸ்கோர் பண்ணிருக்காம்! அதாவது மிட்-ரேஞ்ச் விலையில ஒரு பிளாக்ஷிப் லெவல் பெர்ஃபார்மன்ஸை நீங்க எதிர்பார்க்கலாம். இது கூடவே 12GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் ஆப்ஷனும் வருது. கேமிங் விளையாடுறவங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் தான்.

பேட்டரி எனும் ராட்சசன்:

நம்ம ஊர்ல போன் சார்ஜ் சீக்கிரம் தீந்துடுதேன்னு கவலைப்படுறவங்களுக்கு ரியல்மி கொடுத்திருக்கிற கிஃப்ட் தான் இந்த 7000mAh Titan Battery. இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தும் போன் பார்க்க ரொம்ப ஸ்லிம்மா, 'அர்பன் வைல்ட்' டிசைன்ல செம்ம ஸ்டைலா இருக்கு. இதை சார்ஜ் பண்ண 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் குடுத்திருக்காங்க. ஒருவாட்டி சார்ஜ் போட்டா மூணு நாளைக்கு கவலையே இல்லை பாஸ்!

போட்டோகிராபி லவ்வர்ஸ்க்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் இருக்கு. இதுல 200MP மெயின் கேமரா (Samsung HP5 சென்சார்) கூடவே, மறுபடியும் 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸை கொண்டு வந்திருக்காங்க. ஜூம் பண்ணி போட்டோ எடுக்குறதுல இந்த முறை ரியல்மி வேற லெவல் ஸ்கெட்ச் போட்டுருக்காங்க.

நம்ம ஊர்ல போன் சார்ஜ் சீக்கிரம் தீந்துடுதேன்னு கவலைப்படுறவங்களுக்கு ரியல்மி கொடுத்திருக்கிற கிஃப்ட் தான் இந்த 7000mAh Titan Battery. இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தும் போன் பார்க்க ரொம்ப ஸ்லிம்மா, 'அர்பன் வைல்ட்' டிசைன்ல செம்ம ஸ்டைலா இருக்கு. இதை சார்ஜ் பண்ண 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் குடுத்திருக்காங்க. ஒருவாட்டி சார்ஜ் போட்டா மூணு நாளைக்கு கவலையே இல்லை பாஸ்! டிஸ்ப்ளேவை பொறுத்தவரை 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் இருக்குறதால வெயில்ல வச்சு பார்த்தாலும் ஸ்கிரீன் பளிச்சுனு தெரியும்.
ஜனவரி 6, 2026-ல இந்த போன் இந்தியாவுல லான்ச் ஆகுது. இதோட விலை ₹35,000-லிருந்து ₹40,000 பட்ஜெட்ல இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட்ல இதோட டீஸர் இப்போவே அனல் பறக்குது. நீங்க இந்த 7000mAh பேட்டரி போனுக்காக வெயிட் பண்றீங்களா? இல்ல வேற ஏதாச்சும் போன் ஐடியாவுல இருக்கீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: realme, Realme 16 Pro, Snapdragon 7 Gen 4 SoC

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஜியோ AI கால் ஏஜென்ட் விளக்கம்: இது என்ன, எப்படி வேலை செய்கிறது, இதன் அம்சங்கள் மற்றும் பல
  2. டால்பி அட்மாஸ், 50W ஸ்பீக்கர்களுடன் ஹேயர் HQLED P7 புரோ ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அறிமுகம்
  3. சாம்சங் கேலக்ஸி M47 5G இந்திய அறிமுகம் டீஸ் செய்யப்பட்டது, அமேசானில் உள்ள மைக்ரோசைட் வடிவமைப்பை உணர்த்துகிறது
  4. 50MP கேமராவுடன் ரெட்மி டர்போ 5 இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை சலுகைகள்
  5. ஒப்போ ரெனோ 16 உடன் ரெனோ 16c மாடலும் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பு: விவரக்குறிப்புகள் கசிந்தன
  6. 6,500mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 SoC உடன் விவோ Y6e 5G அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  7. சாம்சங் கேலக்ஸி S27 மாடலில் பெரிய டிஸ்ப்ளே மற்றும் கேமரா அப்கிரேடுகள் இருக்காது: அறிக்கை
  8. இந்தியாவில் ஹைசென்ஸ் E8S மினி-LED டிவி சீரிஸ் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இன்ஸ்டாகிராமில் ஸ்பேம் மற்றும் பாட் ஃபாலோயர்களை எவ்வாறு நீக்குவது: ஒரு முழுமையான வழிகாட்டி
  10. ஒப்போ ரெனோ 15A 5G 7,000mAh பேட்டரி, 50-மெகாபிக்சல் மெயின் கேமராவுடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.