இனி ஆன்லைன்ல புக்கிங் செஞ்சு கொரோனா பரிசோதனை செஞ்சுக்கலாம்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 31 மார்ச் 2020 11:28 IST
ஹைலைட்ஸ்
  • கோவிட்-19 பரிசோதனைகள் இப்போது பிராக்டோவில் கிடைக்கின்றன
  • பிராக்டோ, கண்டறிதல் பரிசோதனைகளை நடத்துவதற்கு தைரோகேருடன் இணைந்துள்ளது
  • இதற்கு அரசாங்கமும் ஐ.சி.எம்.ஆரும் அங்கீகாரம் அளித்துள்ளன

பிராக்டோவில், கோவிட்-19 கண்டறிதல் பரிசோதனையின் தொகை ரூ.4,500 ஆகும்.

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதைத் தொடந்து, 'பிராக்டோ' இணையதளம் மூலம் வைரஸ் பரிசோதனையை ஆன்லைனில் செய்துகொள்ளலாம். 

பிராக்டோ நிறுவனம், தைரோகேருடன் இணைந்து கண்டறிதல் சோதனைகளை நடத்தவுள்ளது. இந்த சோதனையை நடத்த, இந்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) இரண்டும் அங்கீகாரம் அளித்துள்ளது. வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ள, மருத்துவரின் பரிந்துரை, மருத்துவர் கையெழுத்திட்ட பரிசோதனை கோரிக்கை படிவம் மற்றும் பரிசோதனை நேரத்தில் புகைப்பட அடையாள அட்டை வழங்க வேண்டும். 


பரிசோதனைக்கான விவரங்கள்:

  • பரிசோதனையின் முழுத்தொகை ரூ.4,500 ஆகும். 
  • https://www.practo.com/covid-test மற்றும் https://covid.thyrocare.com/-க்கு சென்று முன்பதிவு செய்யலாம்.
  • I2H-ன் சான்றளிக்கப்பட்ட ஃபிளெபோடோமிஸ்டுகள் நோயாளிகளின் வீடுகளிலிருந்து நேரடியாக மாதிரிகளை சேகரிப்பார்கள். 
  • ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல்களின் படி, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். 
  • பரிசோதனையின் போது எடுக்கப்படும் ஸ்வாப், வைரல் போக்குவரத்து ஊடகத்தில் (VTM) சேகரிக்கப்பட்டு. 
  • கோவிட்-19 சோதனைக்கு தேர்வு செய்யப்பட்டதும், தைரோகேர் ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்படும்.
  • மாதிரி சேகரிப்பட்ட 24-48 மணி நேரத்திற்குள் பிராக்டோ இணையதளத்தில், மருத்துவ ரிப்போர்ட் கிடைக்கும்.

கோவிட்-19 தொற்று பரவுவதைத் தடுக்கவும், கண்காணிக்கவும் பரிசோதனை மிக முக்கியமானது. நோய்த்தொற்றின் அறிகுறிகளை உறுதிசெய்ய, ஆய்வகங்கள் மற்றும் மையங்களின் பட்டியலை விரிவுபடுத்துவதில் அரசு மும்முரமாக உள்ளது. Practo, வைரஸ் பரவியுள்ள பல பகுதிகளை அடையாளம் கண்டு அதிகாரிகளுடன் தொடர்ந்து பணியாற்றவுள்ளது. இது போன்ற கடினமான காலங்களில், அனைத்து இந்தியர்களுக்கும், தரமான சுகாதாரத்தை வழங்குவத்தே எங்களின் முக்கிய குறிக்கோள் என்று, பிராக்டோவின் தலைமை சுகாதார அதிகாரி, டாக்டர் அலெக்சாண்டர் குருவில்லா (Alexander Kuruvilla) கூறினார்.  

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Practo, COVID 19, Coronavirus
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ போனுக்கு ரூ. 2,450 தள்ளுபடி: 6,000mAh பேட்டரி கொண்ட போன் குறைந்த விலையில் கிடைக்கிறது
  2. ரியல்மி 16டி 5ஜி போனுக்கு ரூ. 3,500 தள்ளுபடி: 8,000mAh பேட்டரி கொண்ட போனை குறைந்த விலையில் வாங்குங்கள்
  3. மேப்பிள் விற்பனை: ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ், 16 ப்ரோ, 15 மாடல்கள் ரூ.40,999 முதல் சலுகைகளுடன் கிடைக்கின்றன
  4. உலகின் முதல் ட்ரை-போல்ட் ஸ்மார்ட்போன் மேம்படுத்தப்படுகிறது: ஹவாய் மேட் எக்ஸ்டி 2 டிசைன் கசிந்தது
  5. ஏர்டெல் ரூ.549 போஸ்ட்பெய்ட் திட்டத்தை நீக்கியது; அடுத்த மேம்படுத்தலாக ரூ.699 திட்டம் மாறுகிறது
  6. குரோம்புக் vs விண்டோஸ் லேப்டாப்: இந்தியாவில் நீங்கள் எதை வாங்க வேண்டும்?
  7. ஏர்டெல் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை ஹாட்ஸ்பாட் மூலம் பகிர முடியாது எனத் தகவல்: இதுவரை தெரிந்தவை
  8. இந்தியாவில் ஃபிஃபா உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டியை நேரலையாக (Live Stream) பார்ப்பது எப்படி
  9. பயன்படுத்திய போன் வாங்கப்போறீங்களா? பணத்தைச் செலவிடும் முன் இந்த விஷயங்களை உடனே சரிபார்க்கவும்!
  10. அலுமினியம் ஃபாயில் வீட்டு வைஃபை-ஐ மேம்படுத்தி, தேவையான இடத்தில் அதிவேக நெட்வொர்க்கை வழிநடத்தும்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.