மீண்டும் ப்ளே ஸ்டோருக்கு வந்தது மிட்ரான் ஆப்! பயனர்கள் உற்சாகம்

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 5 ஜூன் 2020 20:29 IST
ஹைலைட்ஸ்
  • Mitron has an interface very similar to TikTok
  • Remove China Apps is still delisted from Google Play
  • Mitron is only available for Android users right now

ப்ளே ஸ்டோரில் நீக்கப்படுவதற்கு முன்பாக 50 லட்சம் டவுண்லோடுகளை மிட்ரான் ஆப் கடந்திருந்தது.

கடந்த சில  நாட்களாக கூகுள் ப்ளே ஸ்டோரில் நீக்கப்பட்டிருந்த மிட்ரான் ஆப் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் மிட்ரான் விரும்பிகள் உற்காகம் அடைந்துள்ளனர். 

சீனாவின் டிக் டாக் ஆப்பிற்கு மாற்றாக இந்திய தயாரிப்பான மிட்ரான் ஆப் கருதடப்படுகிறது. கூகிள் பிளே கொள்கைகளை மீறியதால் இந்த வார தொடக்கத்தில் குறுகிய வீடியோ தளம் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து அகற்றப்பட்டது. கூகிள் மிட்ரான் தனது “ஸ்பேம் மற்றும் குறைந்தபட்ச செயல்பாடு” கொள்கையை மீறியதாகக் கூறியது. ஆனால் பின்னர் தொழில்நுட்ப நிறுவனமானது டெவலப்பருடன் இணைந்து சிக்கல்களைச் சரிசெய்ய உதவுகிறது என்று தெளிவுபடுத்தியது. 

Advertisement

இப்போது, ​​அந்த தெளிவுபடுத்தலுக்கு ஒரு நாள் கழித்து, பயன்பாடு மீண்டும் Google Play இல் உள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பு, மிட்ரான் பயன்பாடு 50 லட்சம் பதிவிறக்கங்களைக் கடந்திருந்தது.

ஜூன் 2 ம் தேதி கூகிள் கூகிள் பிளேயிலிருந்து மிட்ரானை நீக்கியது. கூகுளின் விதிமுறைகளை மீறியதாக மிட்ரான் மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஆப் நீக்கப்பட்டது. 

இந்தியாவில்  சீனாவுக்கு எதிரான மனநிலை அதிகம் காணப்படுகிறது. இதனால் சீன ஆப்பான டிக் டாக்கிற்கு மாற்றமாக 2 மாதங்களுக்கு முன்பு மிட்ரான் வந்தபோது  அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

Advertisement

இருப்பினும் மிட்ரான் ஆப்பில் தகவல்கள்  திருடப்படுவதாகவும் புகார்கள் கூறப்பட்டன. இதுதொடர்பாக மிட்ரான் தரப்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டதா என்பது குறித்த விவரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. 

இந்த நிலையில் ப்ளே ஸ்டோரின் மீண்டும் மிட்ரான் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நாடு முழுவதும், எல்லை பிரச்னை காரணமாக சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு வலுத்து வருவதை காண முடிகிறது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Mitron, Mitron App, Google Play, TikTok
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.