Instagram-ல தீபாவளி ஜோர்! Meta AI மூலம் போட்டோ, வீடியோவுக்கு பட்டாசு, தீபம், ரங்கோலி டிசைன்!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 20 அக்டோபர் 2025 23:56 IST
ஹைலைட்ஸ்
  • AI Power: இந்த எஃபெக்ட்கள் Meta AI மூலம் இயங்குகின்றன
  • வீடியோக்களுக்கு Lanterns, Marigold, Rangoli என 6 தீம்ஸ் உள்ளன
  • இந்தியா மற்றும் சில வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

இன்ஸ்டாகிராம் கதைகள் மற்றும் திருத்தங்கள் பயன்பாட்டில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கான புதிய காட்சி விளைவுகள் உள்ளன

Photo Credit: Instagram

தீபாவளி வருதுன்னாலே, கொண்டாட்டம்தான்! அதுல சோஷியல் மீடியாவுக்கு ரொம்ப முக்கிய பங்கு இருக்கு. இப்போ Instagram ரசிகர்களுக்காக, Meta கம்பெனி ஒரு புது, ஜாக்பாட் அம்சத்தை கொண்டு வந்திருக்காங்க. அதுதான் Meta AI பவர்ல இயங்குற தீபாவளி ஸ்பெஷல் எஃபெக்ட்கள். உங்களுடைய சாதாரண போட்டோ அல்லது வீடியோவை எடுத்து, அதில் தீபம், பட்டாசு, பூக்கள் அப்படின்னு, நீங்க செலக்ட் பண்ற Diwali Theme-ஐ, ஒரே ஒரு டச்ல, AI தானாகவே டிசைன் பண்ணி கலர்ஃபுல்லா மாத்திடும். இந்த புது வசதிக்கு பேரு 'Restyle' அம்சம்னு சொல்றாங்க.

எங்கெங்கு யூஸ் பண்ணலாம்?

இந்த வசதியை நீங்க ரெண்டு இடத்துல பயன்படுத்தலாம்:

Advertisement
  • Instagram Stories: உங்க ஸ்டோரி போடும்போது.
  • Edits App: Meta-வின் தனி வீடியோ எடிட்டிங் ஆப்பான 'Edits' ஆப்-ல.

என்னென்ன எஃபெக்ட்கள் இருக்கு?

இந்த Restyle அம்சம் மூலம் மொத்தம் ஆறு தீபாவளி தீம்ஸ் இருக்கு.
போட்டோக்களுக்கு (Images): Fireworks (பட்டாசு), Diyas (தீபம்), மற்றும் Rangoli (ரங்கோலி).
வீடியோக்களுக்கு (Videos): Lanterns (காகித விளக்கு), Marigold (சாமந்திப் பூக்கள்), மற்றும் Rangoli.
ஒவ்வொரு எஃபெக்ட்டும் இந்தியப் பாரம்பரியம், நிறங்கள், மற்றும் திருவிழா உணர்வை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்காம்.
எப்படி பயன்படுத்துவது?

  1. முதல்ல Instagram App ஓபன் பண்ணுங்க. ஸ்டோரிஸ் செக்ஷனுக்கு போங்க.
  2. உங்க கேமரா ரோல்ல இருந்து ஒரு போட்டோ அல்லது வீடியோவை செலக்ட் பண்ணுங்க.
  3. ஸ்கிரீனோட டாப்ல, 'Restyle' ஐகான் (அது ஒரு பெயின்ட் பிரஷ் (paintbrush) மாதிரி இருக்கும்) இருக்கும். அதை டாப் பண்ணுங்க.
  4. இப்போ 'Diwali' ஆப்ஷன்களை பார்த்து, உங்களுக்கு பிடிச்ச எஃபெக்ட்டை (உதாரணத்துக்கு 'Diyas'-ஐ) செலக்ட் பண்ணுங்க.
  5. Meta AI அந்த எஃபெக்ட்டை உங்க போட்டோவுல அப்ளை பண்ண கொஞ்ச நேரம் எடுக்கும். அப்புறம் நீங்க அதை ஷேர் பண்ணலாம்.

இந்த புது Diwali Restyle எஃபெக்ட்கள் ஒரு லிமிடெட் டைம் ஆஃபர் மாதிரிதான்! இது அக்டோபர் 29 வரை மட்டுமே கிடைக்கும்னு அறிவிச்சிருக்காங்க. அப்புறம் இந்த வசதி போயிடும். இது இப்போ இந்தியா, அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கு.
மொத்தத்துல, இந்த Meta AI எஃபெக்ட்கள், இந்த தீபாவளியை Instagram-ல ரொம்பவே கலர்ஃபுல்லா மாற்றப் போகுது. இந்த வசதியை நீங்க யூஸ் பண்ண போறீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Instagram, Edits app, AI

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.