வாட்ஸ்அப் இறுதியாக டார்க் மோட் அம்சத்தையும் அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது சுமார் ஒரு வருடமாக சோதனை கட்டத்தில் இருந்தது. இப்போது பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து சமீபத்திய வாட்ஸ்அப் மெசஞ்சர் அப்டேட்டை பதிவிறக்கம் செய்து புதிய அம்சத்தைப் பெறலாம். ஆண்ட்ராய்டு 10-ல் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களும், iOS 13-ல் ஐபோன் பயனர்களும் தங்கள் system settings-ல் டார்க் மோடை இயக்குவதன் மூலம் வாட்ஸ்அப் டார்க் மோடை பெறலாம்.
Theme-ஐ தட்டும்போது System default ஆப்ஷனையும் நீங்கள் காண்பீர்கள், இது default system settings-ன்படி தானாகவே லைட் மற்றும் டார்க் மோடில் மாறுகிறது.
இந்த கையேடு முறை iOS 13 பயனர்களுக்கு கிடைக்கவில்லை. மேலும், iOS 13 இல்லாத ஐபோன் பயனர்கள் வாட்ஸ்அப்பின் டார்க் மோடை அனுபவிக்க முடியாது.
வாட்ஸ்அப் குழு இந்த அப்டேட்டின் விவரங்களை தங்கள் வலைப்பதிவில் (blog) பகிர்ந்து கொண்டது, அங்கு டார்க் மோடை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவது வாசிப்புத்திறன் மற்றும் தகவல் வரிசைமுறை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். படிக்கக்கூடிய வகையில், iOS மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரு தளங்களிலும் system defaults-க்கு நெருக்கமான வண்ணங்களைப் பயன்படுத்துவதாகும். தகவல் வரிசைக்கு, பேஸ்புக்கிற்குச் சொந்தமான நிறுவனம் வண்ணங்கள் மற்றும் வடிவமைப்பு கூறுகளைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது “மிக முக்கியமான தகவல்கள் தனித்து நிற்கின்றன என்பதை உறுதிப்படுத்த.”
டார்க் மோட் அப்டேட் அனைத்து பயனர்களுக்கும் மெதுவாக வெளிவருகிறது, மேலும் அனைவரையும் அடைய சில நாட்கள் ஆகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்