ஹேப்பி ஹோலி 2020 ஸ்டிக்கர்கள்: வாட்ஸ்அப்பில் ஹோலி ஸ்டிக்கர்களை எப்படி பயன்படுத்துவது? 

ஹேப்பி ஹோலி 2020 ஸ்டிக்கர்கள்: வாட்ஸ்அப்பில் ஹோலி ஸ்டிக்கர்களை எப்படி பயன்படுத்துவது? 

ஹோலி போன்ற பண்டிகைகளின் போது ஆன்லைன் வாழ்த்துக்கு, ஸ்டிக்கர்கள் கூடுதல் உறுப்பைச் சேர்க்கிறது

ஹைலைட்ஸ்
  • ஹோலி ஸ்டிக்கர் செயலியில் ஸ்டிக்கர்களின் நல்ல தொகுப்பு உள்ளது
  • வாட்ஸ்அப்பில் “Get More Stickers” ஆப்ஷனிலிருந்து ஸ்டிக்கர்களை சேர்க்க
  • ஸ்டிக்கர்கள் ஆன்லைன் வாழ்த்துக்களுக்கு கூடுதல் பிளேயரைச் சேர்க்கின்றன
விளம்பரம்

கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு மத்தியில் இந்த ஆண்டு ஹோலி கொண்டாடப்படுவதால், டெவலப்பர்கள் வாட்ஸ்அப் வாழ்த்துக்களில் உற்சாகம் குறையாமல் பார்த்துக் கொள்கிறார்கள். மற்ற பண்டிகைகளைப் போலவே, இணையம் முழுவதிலும் ஏராளமான ஸ்டிக்கர்கள் உள்ளன, மேலும் பண்டிகைகளின் போது அவை அனைத்தும் பகிரப்படும் தளம் வாட்ஸ்அப் ஆகும். இப்போது, ​​ஸ்டிக்கர்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்று தெரியாதவர்களுக்கு, நீங்கள் செயலியை பதிவிறக்கும் போது, முன்பே ஏற்றப்பட்ட சில இயல்புநிலை ஸ்டிக்கர்களைத் தவிர, வாட்ஸ்அப் ஒருபோதும் ஸ்டிக்கர்களை உருவாக்காது என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம்.


ஆண்ட்ராய்டிற்கான WhatsApp-ல் ஹோலி வாழ்த்து விளையாட்டை அதிகரிக்க சிறந்த ஸ்டிக்கர்களை எவ்வாறு பெறுவது என்பது குறித்த வழிகாட்டி இங்கே:

1. chat bar-ன் இடது பக்கத்தில் உள்ள எமோஜி ஐகானைக் கிளிக் செய்து, கீழே இருந்து ஸ்டிக்கர்கள் ஆப்ஷனை திறப்பதன் மூலம் (வலதுபுறம் ஒன்று) வாட்ஸ்அப் ஸ்டிக்கர்கள் பகுதிக்குச் செல்லவும்.

2. இப்போது, ​​வாட்ஸ்அப், 12 இயல்புநிலை ஸ்டிக்கர் பேக்குகளுடன் மட்டுமே வருகிறது, மேலும் பட்டியலில் எந்த ஹோலி ஸ்டிக்கர்களையும் நீங்கள் காண முடியாது. பொருத்தமான ஸ்டிக்கர்களை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை எனில், ஸ்டிக்கர்கள் சாளரத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள பிளஸ் (+) ஆப்ஷனை கிளிக் செய்யவும் - இது உங்கள் வாட்ஸ்அப்பில் கிடைக்கக்கூடிய அனைத்து ஸ்டிக்கர் பேக்குகளையும் திறக்கும்.

3. நீங்கள் இன்னும் எந்த ஹோலி ஸ்டிக்கர்களையும் கண்டுபிடிக்க முடியாவிட்டால், கீழே ஸ்க்ரால் செய்யவும், பிளே ஸ்டோர் லோகோவுடன் 'Get More Stickers' என்பதைக் கிளிக் செய்யவும்.

4. அதைக் கிளிக் செய்வதன் மூலம் பிளே ஸ்டோருக்கு உங்களை அழைத்துச் செல்லும், இது பல ஸ்டிக்கர் செயலிகளைக் காண்பிக்கும்.

5. கூகுள் பிளே ஸ்டோரில் 'ஹோலி ஸ்டிக்கர்களை' தேடி எந்த செயலியையும் பதிவிறக்கம் செய்யலாம். பிளே ஸ்டோரில் 4.6 மதிப்பீட்டைக் கொண்ட ஜெகந்நாத் தொழில்நுட்பத்திலிருந்து ஹோலி ஸ்டிக்கர் - வாஸ்டிக்கர்ஆப்ஸை (WAStickerApps) முயற்சித்தோம்.

6. இந்த செயலி உங்களுக்கு ஐந்து பேக்குகளைக் காண்பிக்கும், எதை கிளிக் செய்தாலும் ஹோலி மையமாகக் கொண்ட ஸ்டிக்கர்கள் காண்பிக்கப்படும்.

7. கீழே உள்ள 'add to WhatsApp' பொத்தானைக் கிளிக் செய்து, பாப்-அப் மீது 'ADD' என்பதைக் கிளிக் செய்து, உங்கள் வாட்ஸ்அப் மெசஞ்சருக்கு ஸ்டிக்கர்கள் பதிவிறக்கம் செய்யப்படும்.

வாட்ஸ்அப்பில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஸ்டிக்கர்கள் மெனுவில் உள்ள ‘பிளஸ்' (+) பொத்தானைக் கிளிக் செய்தால், Stickers பக்கத்தில் காண்பிக்கப்படும்.

ஐபோனுக்கான வாட்ஸ்அப்-ம் இதே போன்ற ஆப்ஷன்களைக் கொண்டுள்ளது, ஆனால் ஆப் ஸ்டோரில் தேடுவதன் மூலம் கூடுதல் ஸ்டிக்கர்களைச் சேர்க்க வழி இல்லை. உங்கள் contacts-ல் இருந்து நீங்கள் பெறும் ஸ்டிக்கர்களை சேமித்து அவற்றை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வதே நீங்கள் செய்யக்கூடியதாகும்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Holi, WhatsApp Stickers, Stickers, Online Greetings
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »