கூகுளின் டிஜிட்டல் பேமென்ட் ஆப்பான ‘கூகுள் பே’ ஆப்பில் புதியதாக ‘பே செண்ட்’ என்ற வசதியை இணைத்துள்ளது அந்நிறுவனம். இதுவரை பல்வேறு வகையான கட்டணங்களை செலுத்த மட்டுமே முடியும் என்றிருந்த இந்த ஆப்பில், இப்போது நண்பர்களுக்கு பணம் அனுப்பவும், பணம் பெறவும் முடியும் என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அது மட்டும் இல்லாமல், பயண டிக்கெட்கள், சினிமா டிக்கெட்கள் மற்ற நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்களை இந்த ஆப் மூலமே வாங்கவும், அந்த டிக்கெட்களை டிஜிட்டல் பாஸாகவும் சேமித்து வைக்கவும் முடியும்.
டிக்கெட்கள் வாங்கும் போது கூப்பன்களும், கிஃப்ட் கார்டுகளும் பரிசாக வழங்கப்படுகின்றன. மொபைல் எண் மூலம் கூகுள் ‘பே’வில் கணக்கு தொடங்கலாம். “ மொபைலில் மட்டும் அல்ல, டெஸ்க்டாப்பிலும் கூகுள் ‘பே’ பயன்படுத்தும் வசதியை ஏற்ப்படுத்தி இருக்கிறோம். ஐ.ஓ.எஸ்ஸிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வணிக நிறுவனங்கள், டிக்கெட் புக்கிங், பணம் அனுப்பவும், பெறவும் என பல வகையில் கூகுள் பே ஆப்பை பயன்படுத்தலாம்” கூகுள் பேமென்ட்ஸின் இயக்குநர் ஜெரார்டோ கேப்பில்.
டெஸ்க்டாப்புக்கு ஏற்ற வகையில் பாஸ்களை சேமித்து வைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும், கட்டணம் செலுத்தும் போது சிறப்பு ஆஃபர்கள் வழங்கப்படுவதால், பணமும் மிச்சமாகிறது. மொத்தத்தில் பணப் பரிவர்த்தனைகளுக்கு ஒரே ஆப் என்ற நோக்கில் கூகுள் நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது.
இந்த அப்டேட் தற்போது, அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்ததாக ஐக்கிய நாடுகளிலும், பின் உலகம் முழுவதும் கொண்டு வரப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்