Facebook பயனர்களே புது Privacy அப்டேட்ஸ் பற்றி தெரிஞ்சுகோங்க...! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 7 ஜனவரி 2020 15:39 IST
ஹைலைட்ஸ்
  • Privacy Checkup tool-ன் புதிய பதிப்பு இந்த வாரம் உலகளவில் வெளிவருகிறது
  • கேள்விக்குறி ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் Privacy Checkup-ஐ அணுகலாம்
  • தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை கட்டுப்படுத்த பேஸ்புக் உதவும்

"Who Can See What You Share" என்ற அம்சம் பயனர்கள் தங்கள் சுயவிவரத் தகவலை, யார் காணலாம் என்பதை மதிப்பாய்வு செய்ய உதவும்

பேஸ்புக் தனது Privacy Checkup tool-ஐ நான்கு புதிய அம்சங்களுடன் புதுப்பித்துள்ளது. இது பயனர்கள் கணக்கு பாதுகாப்பை மேம்படுத்தவும், அவர்களின் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

இந்த Privacy Checkup tool, கடந்த 2014 முதல் நேரலையில் உள்ளது. மேலும், புதிய பதிப்பு இந்த வாரம் உலகளவில் வெளிவருகிறது.

"Who Can See What You Share" என்ற அம்சம், பயனர்கள் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மற்றும் அவர்களின் பதிவுகள் போன்ற சுயவிவரத் தகவல்களை யார் காண முடியும் என்பதை மதிப்பாய்வு செய்ய உதவும்.

"How to Keep Your Account Secure" என்ற அம்சம் வலுவான password-ஐ அமைத்து login alerts-ஐ இயக்குவதன் மூலம் உங்கள் கணக்கு பாதுகாப்பை வலுப்படுத்த உதவும்" என்று பேஸ்புக், திங்கள்கிழமை பிற்பகுதியில் ஒரு வலைப்பதிவில் தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் "How People Can Find You" என்பது உங்களை பேஸ்புக்கில் மக்கள் பார்க்கக்கூடிய வழிகளையும், உங்களுக்கு யார் நண்பர் கோரிக்கைகளை (friend requests) அனுப்ப முடியும் என்பதையும் மதிப்பாய்வு செய்ய அனுமதிக்கும்.

"பேஸ்புக்கில் உங்கள் Data Settings-ல் நீங்கள் பேஸ்புக்கில் உள்நுழைந்த செயலியுடன் நீங்கள் பகிரும் தகவல்களை மதிப்பாய்வு செய்ய அனுமதிக்கும். நீங்கள் இனி பயன்படுத்தாத செயலிகளை அகற்றலாம்" என்று சமூக வலைத்தளம் கூறியது.

பேஸ்புக்கின் டெஸ்க்டாப் தளத்தில் உள்ள கேள்விக்குறி ஐகானைக் கிளிக் செய்து Privacy Checkup-ஐ தேர்ந்தெடுப்பதன் மூலம் Privacy Checkup-ஐ அணுகலாம்.

"privacy is personal என்று எங்களுக்குத் தெரியும், உங்களுக்காக சரியான privacy decisions எடுக்க உங்களுக்கு உதவ privacy tips-ஐ  ஒருங்கிணைத்துள்ளோம்" என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Facebook, Facebook Updates
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஆப்பிள் கார்பிளேயில் சாட்ஜிபிடி அறிமுகம்; ஆனால் நேவிகேஷன் மற்றும் நேரலை இருப்பிடத் தகவலை அணுக முடியாது.
  2. ஆப்பிள் 50வது ஆண்டு விற்பனை: ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ரூ. 1,02,900 விலையில்; ஐபேட், வாட்ச் மாடல்களுக்கும் சலுகைகள்
  3. ஒன்பிளஸ் நார்டு 6 (OnePlus Nord 6) - முதல் பார்வை
  4. ஒப்போ F33, ஒப்போ F33 ப்ரோ அறிமுகக் காலம் மற்றும் விலை விவரங்கள் வெளியாகியுள்ளன
  5. ஏப்ரல் மாத பிஎஸ் பிளஸில் லார்ட்ஸ் ஆஃப் தி ஃபாலன்,டோம்ப் ரைடர் மற்றும் ஸ்வார்ட் ஆர்ட் ஆன்லைன் கேம்கள் இணைகின்றன.
  6. கூகுள் AI ப்ரோ திட்டத்தில் கூடுதல் கட்டணமின்றி 5TB கிளவுட் ஸ்டோரேஜ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  7. DarkSword பாதிப்பை சரிசெய்ய, iOS 18-ல் இயங்கும் பழைய ஐபோன்களுக்கு ஆப்பிள் அவசர அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
  8. ரெட்மி நோட் 15 SE 5G இந்தியாவில் அறிமுகம்: 5,800mAh பேட்டரி, வேகன் லெதர் ஃபினிஷ்: விலை, சிறப்பம்சங்கள்
  9. Realme 16 5G இந்தியாவில் அறிமுகம்: 7,000mAh பேட்டரி, 50-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா: விலை, சிறப்பம்சங்கள்
  10. விவோ V70 FE இந்தியாவில் அறிமுகம்: 7,000mAh பேட்டரி, 200MP கேமரா; விலை மற்றும் சிறப்பம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.