Facebook பயனர்களே புது Privacy அப்டேட்ஸ் பற்றி தெரிஞ்சுகோங்க...! 

Facebook பயனர்களே புது Privacy அப்டேட்ஸ் பற்றி தெரிஞ்சுகோங்க...! 

"Who Can See What You Share" என்ற அம்சம் பயனர்கள் தங்கள் சுயவிவரத் தகவலை, யார் காணலாம் என்பதை மதிப்பாய்வு செய்ய உதவும்

ஹைலைட்ஸ்
  • Privacy Checkup tool-ன் புதிய பதிப்பு இந்த வாரம் உலகளவில் வெளிவருகிறது
  • கேள்விக்குறி ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் Privacy Checkup-ஐ அணுகலாம்
  • தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை கட்டுப்படுத்த பேஸ்புக் உதவும்
விளம்பரம்

பேஸ்புக் தனது Privacy Checkup tool-ஐ நான்கு புதிய அம்சங்களுடன் புதுப்பித்துள்ளது. இது பயனர்கள் கணக்கு பாதுகாப்பை மேம்படுத்தவும், அவர்களின் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

இந்த Privacy Checkup tool, கடந்த 2014 முதல் நேரலையில் உள்ளது. மேலும், புதிய பதிப்பு இந்த வாரம் உலகளவில் வெளிவருகிறது.

"Who Can See What You Share" என்ற அம்சம், பயனர்கள் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மற்றும் அவர்களின் பதிவுகள் போன்ற சுயவிவரத் தகவல்களை யார் காண முடியும் என்பதை மதிப்பாய்வு செய்ய உதவும்.

"How to Keep Your Account Secure" என்ற அம்சம் வலுவான password-ஐ அமைத்து login alerts-ஐ இயக்குவதன் மூலம் உங்கள் கணக்கு பாதுகாப்பை வலுப்படுத்த உதவும்" என்று பேஸ்புக், திங்கள்கிழமை பிற்பகுதியில் ஒரு வலைப்பதிவில் தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் "How People Can Find You" என்பது உங்களை பேஸ்புக்கில் மக்கள் பார்க்கக்கூடிய வழிகளையும், உங்களுக்கு யார் நண்பர் கோரிக்கைகளை (friend requests) அனுப்ப முடியும் என்பதையும் மதிப்பாய்வு செய்ய அனுமதிக்கும்.

"பேஸ்புக்கில் உங்கள் Data Settings-ல் நீங்கள் பேஸ்புக்கில் உள்நுழைந்த செயலியுடன் நீங்கள் பகிரும் தகவல்களை மதிப்பாய்வு செய்ய அனுமதிக்கும். நீங்கள் இனி பயன்படுத்தாத செயலிகளை அகற்றலாம்" என்று சமூக வலைத்தளம் கூறியது.

பேஸ்புக்கின் டெஸ்க்டாப் தளத்தில் உள்ள கேள்விக்குறி ஐகானைக் கிளிக் செய்து Privacy Checkup-ஐ தேர்ந்தெடுப்பதன் மூலம் Privacy Checkup-ஐ அணுகலாம்.

"privacy is personal என்று எங்களுக்குத் தெரியும், உங்களுக்காக சரியான privacy decisions எடுக்க உங்களுக்கு உதவ privacy tips-ஐ  ஒருங்கிணைத்துள்ளோம்" என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Facebook, Facebook Updates
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »