டிக்டாக்கை போல் மாறும் ஃபேஸ்புக்? முழு விவரங்கள்.!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 15 ஆகஸ்ட் 2020 18:38 IST
ஹைலைட்ஸ்
  • ஃபேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் என்ற அம்சதை அறிமுகம் செய்தது
  • தற்போது டிக்டாக் போன்று குறுவீடியோ அம்சத்தை ஃபேஸ்புக்கில் சோதனை
  • அமெரிக்காவிலும் டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்படுகிறது

இந்தியாவில் டிக்டாக் தடைசெய்யப்பட்ட பிறகு அந்த இடத்தை பிடிக்க ஃபேஸ்புக் முயற்சிக்கிறது

இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், டிக்டாக்கைப் போன்றே குறுவீடியோ அம்சத்தைக் கொண்டு வர ஃபேஸ்புக் முயற்சித்து வருகிறது. 

சீனாவுடனான எல்லை பிரச்சனைக்கு பிறகு இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் சீன செயலியான டிக்டாக் தடை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவிலும் டிக்டாக் செப்டம்பர் முதல் முழுமையாக தடை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது பிரபல சமூகவலைதளமான ஃபேஸ்புக் நிறுவனம், டிக் டாக் பாணியில் புதியதொரு அம்சத்தைக் கொண்டு வர சோதனை செய்து வருகிறது. ஏற்கனவே, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. 

இது தொடர்பாக சமூகவலைதள நிபுணர் மாத் நவர்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் ஃபேஸ்புக்கின் குறுவீடியோ குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, டிக்டாக்கில் உள்ளது போன்றே குறுவீடியோக்களையும், ஸ்வைப் செய்தால் அடுத்த வீடியோ உடனடியாகத் தோன்றும்படியும் ஒரு அம்சத்தை உருவாக்கி வருகிறது. 

மேலும், இந்த குறுவீடியோக்களை வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் எளிதாக பகிரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  அத்துடன் கமெண்ட்ஸ், லைக்ஸ் போன்றவைகளும் எளிமையாக்கப்படுகின்றன. இது தற்சமயம் சோதனை முறையில் செயலாக்கப்பட்டு வருகிறது. இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை. இதனால், ஃபேஸ்புக்கின் புதிய அப்டேட்டில் இந்த வசதி இருக்காது. விரைவில் கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது. 

முன்னதாக தடை செய்யப்பட்ட பிரபல டிக்டாக் செயலியை வாங்குவதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனமும், டுவிட்டர் நிறுவனமும் ஆர்வம் காட்டி வந்தன. இதனிடையே கடந்த மாதம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பைட்டான்ஸ் நிறுவனம் ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. ஆனால், அப்போது எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை. 

மேலும், தற்போது டிக்டாக்கின் வணிகத்தில் முதலீடு செய்வதற்காக ரிலைன்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுவதாக செய்திகள் வந்துள்ளன.  இந்த செய்திக்கு ரிலையன்ஸ் தரப்பிலும், டிக்டாக் தரப்பிலும் எந்த மறுப்பும் வரவில்லை. 


In 2020, will WhatsApp get the killer feature that every Indian is waiting for? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Facebook, Facebook Short Videos, TikTok
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. HMD Pulse 2, Pulse 2 Plus, Pulse 2 Pro மாடல்களில் 5,000mAh பேட்டரி, Unisoc சிப்செட் இடம்பெற வாய்ப்பு
  2. விவோ X500 ப்ரோ கசிவு: 144Hz LTPO டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமென்சிட்டி 9600 ப்ரோ சிப்
  3. 9 JBL ப்ரோ ஸ்பீக்கர்கள்,10,200mAh பேட்டரியுடன் மோட்டோ பேட் 70 க்ரூவ் இந்தியாவில் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி F70 புரோ 5G விலை, வெளியீட்டு தேதி மற்றும் அம்சங்கள் அறிவிப்பு
  5. சோனி WF-1000XM6 உடன் சோனி 1000X தி கலெக்‌ஷன் DSEE அல்டிமேட் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  6. ஒன்பிளஸ் N6x இந்தியாவில் 7,000mAh பேட்டரி, 13-மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  7. இந்தியாவில் eSIM மற்றும் பிசிக்கல் சிம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
  8. இந்தியாவில் PS5 ஸ்டாண்டர்ட் எடிஷன் விலையை சோனி ரூ. 15,000 உயர்த்தியுள்ளது
  9. ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் நத்திங் ஃபோன் (4a) விலை ரூ. 3,000 உயரும் என தகவல்
  10. ஆசஸ் பேட் இந்திய விலை, ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகள் அறிவிப்பு; ஆகஸ்ட் 6 முதல் விற்பனை தொடங்குகிறது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.