கொரோனா வைரஸ்: 240 பயனர்களின் கணக்குகளை இடைநீக்கம் செய்தது உபெர்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 3 பிப்ரவரி 2020 16:11 IST
ஹைலைட்ஸ்
  • மெக்சிகோவில் 240 பயனர்களின் கணக்குகளை உபெர் நிறுத்தியுள்ளது
  • நாவல் கொரோனா வைரஸால் 300-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்
  • மக்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் - சுகாதார அமைச்சகம், மெக்ஸிகோ

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களைக் கொண்டு சென்ற இரண்டு டிரைவர்களை உபெர் கண்டுபிடித்தது

நாவல் கொரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபரை அழைத்துச் சென்ற ஓட்டுனர்களுடன் தொடர்பு வைத்திருக்கலாம் என்று எண்ணி, மெக்ஸிகோவில் 240 பயனர்களின் கணக்குகளை உபெர் இடைநிறுத்தியுள்ளது.

சீனாவின் பிரதான நிலப்பரப்பில் நாவல் கொரோனா வைரஸால் 300-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும், நாட்டிற்கு வெளியே 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றாலும், மெக்சிகோ உறுதிப்படுத்தப்பட்ட நோயளிகளின் தகவல்களைக் கொடுக்கவில்லை.

மெக்ஸிகோ நகர சுகாதார அதிகாரிகள் கொரோனா வைரஸின் சாத்தியக்கூறுகல் குறித்து ஜனவரி மாதம் தகவல்களைக் கோரியதாக ரைடு-ஹெயிலிங் செயலி கூறியது. மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களைக் கொண்டு சென்ற இரண்டு டிரைவர்களை Uber கண்டுபிடித்தது.

"இந்த இரண்டு ஓட்டுனர்களுக்கும், 240 பயனர்களுக்கும், அவர்களின் கணக்குகளை தற்காலிகமாக செயலிழக்கச் செய்வது குறித்து தகவல்களை அனுப்பியுள்ளோம்" என்று நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மெக்சிகோவின் சுகாதார அமைச்சகம், கொரோனா வைரஸ் நபருடன் தொடர்பு கொண்டிருந்தவர்களை - சீன வம்சாவளியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளாக அடையாளம் காணப்பட்டவர்களை, தொடர்ந்து கண்காணிப்பதாகக் கூறியது - பின்னர் நாட்டை விட்டு வெளியேறியது.

"இதுவரை அடையாளம் காணப்பட்ட தொடர்புகளில், வெளிப்படுத்திய 10 நாட்களுக்கு மேலாக நோயின் அறிகுறிகளை யாரும் உருவாக்கவில்லை. இது சராசரி அடைகாக்கும் நேரத்தை மீறுகிறது" என்று அதிகாரிகள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

சனிக்கிழமையன்று, சீன நகரமான வுஹானில் இருந்து 10 பேரை வெளியேற்றியதாக மெக்சிகோ கூறியது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Uber, Mexico, Corona virus
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சோனி WH-1000XM6 இப்போது இந்தியாவில் ஆலிவ் கிரே வண்ணத்தில் கிடைக்கிறது: விலை, கிடைக்கும் இடம், அம்சங்கள்
  2. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல்: நீங்கள் தவறவிடக்கூடாத ஒன்பிளஸ் 15 சலுகை இது
  3. அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல் 2026: ரூ. 20,000-க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் சலுகைகள்!
  4. ரியல்மி 16x 5G பற்றிய தொகுப்பு: வெளியீட்டுத் தேதி, இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  5. Poco M8 Power vs OnePlus Nord CE 6 Lite vs Moto G77 Power: இந்தியாவில் விலை, சிறப்பம்சங்கள் ஒப்பீடு!
  6. ஓட்டுநர் வேலைகள் ஆபத்தில் இருக்குமா? 120,000 ஓட்டுநர் இல்லாத ரோபோடாக்சிகளை இயக்க ஊபர் திட்டம்
  7. itel Ace 3 Heera இந்தியாவில் ₹1,000-க்குள் அறிமுகம்: புளூடூத், கால் ரெகார்டிங், வயர்லெஸ் FM ரேடியோ வசதி!
  8. வோடஃபோன் ஐடியா (Vi) ரூ. 230 முதல் புதிய ப்ரீபெய்ட் பிளான்களுடன் ஸ்பாட்டிஃபை ப்ரீமியத்தை வழங்குகிறது
  9. இன்டெல் N50, கூகுள் AI அம்சங்களுடன் அசுஸ் குரோம்புக் CX15 இந்தியாவில் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  10. iQOO Z11 இந்தியாவில் ஆகஸ்ட் 20 அன்று அறிமுகம்: எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள், அம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.