நாவல் கொரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபரை அழைத்துச் சென்ற ஓட்டுனர்களுடன் தொடர்பு வைத்திருக்கலாம் என்று எண்ணி, மெக்ஸிகோவில் 240 பயனர்களின் கணக்குகளை உபெர் இடைநிறுத்தியுள்ளது.
சீனாவின் பிரதான நிலப்பரப்பில் நாவல் கொரோனா வைரஸால் 300-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும், நாட்டிற்கு வெளியே 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றாலும், மெக்சிகோ உறுதிப்படுத்தப்பட்ட நோயளிகளின் தகவல்களைக் கொடுக்கவில்லை.
மெக்ஸிகோ நகர சுகாதார அதிகாரிகள் கொரோனா வைரஸின் சாத்தியக்கூறுகல் குறித்து ஜனவரி மாதம் தகவல்களைக் கோரியதாக ரைடு-ஹெயிலிங் செயலி கூறியது. மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களைக் கொண்டு சென்ற இரண்டு டிரைவர்களை Uber கண்டுபிடித்தது.
"இந்த இரண்டு ஓட்டுனர்களுக்கும், 240 பயனர்களுக்கும், அவர்களின் கணக்குகளை தற்காலிகமாக செயலிழக்கச் செய்வது குறித்து தகவல்களை அனுப்பியுள்ளோம்" என்று நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மெக்சிகோவின் சுகாதார அமைச்சகம், கொரோனா வைரஸ் நபருடன் தொடர்பு கொண்டிருந்தவர்களை - சீன வம்சாவளியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளாக அடையாளம் காணப்பட்டவர்களை, தொடர்ந்து கண்காணிப்பதாகக் கூறியது - பின்னர் நாட்டை விட்டு வெளியேறியது.
"இதுவரை அடையாளம் காணப்பட்ட தொடர்புகளில், வெளிப்படுத்திய 10 நாட்களுக்கு மேலாக நோயின் அறிகுறிகளை யாரும் உருவாக்கவில்லை. இது சராசரி அடைகாக்கும் நேரத்தை மீறுகிறது" என்று அதிகாரிகள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
சனிக்கிழமையன்று, சீன நகரமான வுஹானில் இருந்து 10 பேரை வெளியேற்றியதாக மெக்சிகோ கூறியது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்