டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் உருவான இந்த பயன்பாடு, UPI வழி கட்டணங்கள் உபயோகித்து வருகிறது. சமீபகாலமாக, அரசு தரப்பில் இருந்து “பணம் திரும்ப பெரும்’ ஆப்பர்களை அதிகம் கொடுத்தபடி உள்ளது. இதன் மூலம் மக்கள் BHIM பயன்பாட்டை அதிகம் உபயோகிக்கக்ககூடும் என்ற முயற்சியில் செயல்பட்டு வருகிறது.
BHIM பயன்பாட்டின் 1.5 வெர்ஷனில் இந்த வசதியை பதிவிறக்கம் செய்யலாம். BHIM ஆப்-பில் தற்போது ஆண்டுராய்டு மற்றும் Ios போன்களிலும் அனைத்து வித பில் கட்டணங்கள் கட்டும் வசதி செய்யப்பட்டுள்ளது.
BHIM பயன்பாட்டின் சமீபத்திய பதிப்பினை பதிவிறக்கம் செய்தால், ‘பில் பே’ என்ற புதிய பகுதி, ‘ட்ரான்ஸ்பர் மனி’ என்ற பகுதியின் கீழ் இருக்கும். வோடோஃபோன், ஐடியா, பிஎஸ்என்எல் மற்றும் டாடா டோகோமோ ஆகிய போன் சேவைகளுக்கு இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. பிராட்பாண்ட் இணைப்புகளான கனெக்ட் பிராட்பாண்ட் , ஹாத்வே, ஆக்ட் ஃபைபர் நெட், டிகோனா ஆகியவற்றுக்கும் பில் செலுத்தலாம். பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் மற்றும் டாடா டோகோமோ தொலைபேசி கட்டணங்களும் செலுத்தலாம். தற்போது, BHIM பயன்பாட்டில், பில் கட்டுவதற்கான குறைந்த வசதிகளே செய்யப்பட்டுள்ளது. மேலும், இதை மேம்படுத்தும் திட்டங்கள் உள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்