Amazon-ம், BookMyShow-ம் கூட்டு! சினிமா டிக்கெட் புக்கிங்கா....? ஜாக்பாட் Offer!

Amazon-ம், BookMyShow-ம் கூட்டு! சினிமா டிக்கெட் புக்கிங்கா....? ஜாக்பாட் Offer!

புக் மைஷோ மதிப்பீடுகள் மற்றும் திரைப்படங்களுக்கான சுருக்கத்தையும் அமேசான் வழங்குகிறது

ஹைலைட்ஸ்
  • திரைப்பட டிக்கெட்டுகளை Amazon app மற்றும் mobile site-ல் பதிவு செய்யலாம்
  • புதிய சேவையை Amazon Pay tab-ல் காணலாம்
  • Amazon Pay balance / மற்ற டிஜிட்டல் முறையை பயன்படுத்தி பணம் செலுத்தலாம்
விளம்பரம்

அமேசான் இந்தியா (Amazon India) பயனர்கள் இப்போது இ-சில்லறை விற்பனையாளரின் பயன்பாட்டைப் பயன்படுத்தி திரைப்பட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். ஈ-காமர்ஸ் (e-commerce) நிறுவனமான புக் மைஷோவுடன் (BookMyShow) கூட்டு சேர்ந்து இந்த புதிய சேவையை அதன் Prime மற்றும் Non-Prime உறுப்பினர்களுக்கும் வழங்கியுள்ளது. செயலியின் ‘Shop By Category' பிரிவிலும், (Amazon Pay tab) உள்ளும் ஒரு புதிய ‘Movie Tickets' வகை உள்ளது. இந்த புதிய சேவை, பயனர்களை மூவி டிக்கெட்டுகளை வாங்க அனுமதிப்பது மட்டுமல்லாமல், மதிப்புரைகள் மற்றும் மதிப்பீடுகள் உட்பட புக் மைஷோவிலிருந்து (BookMyShow) பிற உள்ளடக்கத்தையும் வழங்குகிறது. அமேசான் இந்தியா (Amazon India) ஏற்கனவே விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது, பில் செலுத்துவது, மொபைல் ரீசார்ஜ் செய்வது போன்றவற்றை வழங்குகிறது. அமேசான் இப்போது பொழுதுபோக்கு பிரிவிலும் நுழைந்துள்ளது.

இந்த சேவை தற்போது செயலி (App) அல்லது மொபைல் தளத்தில் (Mobile Site) மட்டுமே கிடைக்கிறது. மேலும் டெஸ்க்டாப் பயனர்கள் திரைப்பட டிக்கெட் விருப்பங்களை இப்போது பார்க்க முடியாது. புதிய ‘Movie Tickets' வகையை ‘Shop by Category' பிரிவில் அல்லது Amazon Pay Tab-ல் (விமானங்கள் பிரிவுக்கு அடுத்ததாக) காணலாம். விருப்பத்தை கிளிக் செய்தால், உங்கள் பகுதி, உங்கள் சரியான மண்டலம் மற்றும் நீங்கள் விரும்பும் திரைப்படத்தைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்கும். மற்றொரு பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். அதன் பிறகு நீங்கள் திரைப்பட தியேட்டர், நீங்கள் விரும்பும் நிகழ்ச்சியின் நேரம் மற்றும் இருக்கைக்கான விகிதங்களைத் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் BookMyShow -வில் செய்வது போலவே இருக்கைகளையும் தேர்வு செய்யலாம். பின்னர் கட்டண பக்கத்தைப் பெறலாம். அதில் நீங்கள் அமேசான் பே (Amazon Pay) அல்லது பிற டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.

கட்டண ஆப்ஷன்களில் அமேசான் பே பேலன்ஸ் (Amazon Pay Balance), அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு (Amazon Pay ICICI Credit Card), அமேசான் பே யுபிஐ (Amazon Pay UPI) அல்லது பிற டிஜிட்டல் கட்டண முறைகள் அடங்கும். ஐ.சி.ஐ.சி.ஐ அமேசான் பே கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் Amazon.in-ல் திரைப்பட டிக்கெட்டுகளை வாங்கும்போது மாதாந்திர அறிக்கை வெகுமதிகளாக 2 சதவீதம் கேஷ்பேக் பெறுவார்கள். அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக, திரைப்பட டிக்கெட் முன்பதிவிற்கு ரூ. 200 வரையிலான 20 சதவீத கேஷ்பேக்கை Amazon வழங்குகிறது. இந்த சலுகை ஒரு பயனருக்கு ஒரு முறை செல்லுபடியாகும். அதுவும் இன்று முடிவடையும்.

முன்பதிவின் முடிவில், பயனர் எதிர்கால பயன்பாடு மற்றும் நண்பர்கள் மத்தியில் புழக்கத்திற்கான டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும்.

“Amazon.in-ல் ஒரு புதிய வகையாக வீட்டுக்கு வெளியே (out-of-home) திரைப்பட பொழுதுபோக்குகளைத் திறக்க புக் மைஷோவுடன் (BookMyShow) கூட்டாளராக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று அமேசான் பே (Amazon Pay) இயக்குனர் மகேந்திர நேருர்கர் (Mahendra Nerurkar) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். "எங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை ஒவ்வொரு வழியிலும் எளிமைப்படுத்துவதே எங்கள் நோக்கம் - அவர்கள் கடை, பில்கள் செலுத்துதல் அல்லது பிற சேவைகளை நாடுவது. இந்த பார்ட்னர்ஷிப் தற்போதைய பயணத்தின் மற்றொரு படியாகும்.”

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Amazon Pay, BookMyShow
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »