அமேசான் அலெக்ஸா ஆப்பின், வாய்ஸ் கன்ட்ரோல் வசதி ஐபோன் பயன்பாட்டாளர்களுக்கு வெளியாகியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஐபோனுக்கான அலெக்ஸா ஆப் அமேசான் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. வாய்ஸ் கன்ட்ரோல் மூலம் ஸ்மார்ட் அசிஸ்டண்டிற்கு கமாண்ட்ஸ் தரும் வசதி தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வசதி ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்களுக்கு கடந்த ஜனவரியில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபோன் ஐபாட் வாடிக்கையாளர்கள் அலெக்ஸா ஆப் பயன்படுத்தி மியூசிக் ப்ளே, ஸ்மார்ட் ஹோம் செயற்பாடு, இணைய பயன்பாடு, போன்றவற்றை வாய்ஸ் கமாண்ட் மூலம் இயக்கலாம். மே மாதம் முதல்,ஆப்பிள் வாடிக்கையாளர்கள் அலெக்ஸா வாய்ஸ் கன்ட்ரோலை பயன்படுத்தலாம். சிறப்பாக செயல்படுவதால், அலெக்ஸா ஆப், ஆப்பிளின் ‘சிரி’யின் பயன்பாட்டை குறைத்துவிடும் என தெரிகிறது
எனினும், ஆப்பிள் நிறுவனம் சிரி பயன்பாட்டிற்கான 12 முக்கிய அம்சங்களை வெளியிட உள்ளது. இதன் மூலம் இரண்டு வாய்ஸ் அசிஸ்டண்ட்டுகளுக்கும் போட்டி நிலவுகிறது. அலெக்ஸா ஆப்பின் புதிய வசதியை பயன்படுத்த சமீபத்திய 2.2.216514.0 வெர்ஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்