Photo Credit: Xiaomi/ Google
சீனாவின் முன்னனி மின்னணு நிறுவனமான சியோமி புதிதாக ஷேர்சேவ் என்னும் இணைய வணிக தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள் இந்த புதிய ஆன்லையின் வணிக தளத்தின் மூலம் சீனாவில் மட்டுமே பிரபலமாக விற்பனை செய்யப்படும் முன்னனி சுற்றுச்சுழலை பாதுகாக்கும் தயாரிப்புகளை வாங்க முடியும்.
பிளோ ஸ்டோர்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் இந்த ஆப் ஆண்டிராய்டு போன்களில் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். செயலி மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் ஜ-போன்களிலோ அல்லது இணையதளத்தில் பயன்படுத்தும் வசதியை பற்றி இன்னும் தகவல் வெளியாகவில்லை.
மேலும் இதன் மூலம் இந்தியாவில் உள்ளவர்கள் மிகவும் எளிதான முறையில் சீனாவில் இருந்து அங்குள்ள பொருட்களை வாங்க முடியும் என நம்பப்படுகிறது. அதைபோல் விரையில் மற்ற நாடுகிளிளும் இந்த வணிகதளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
‘சியோமி தனது வாடிக்கையாளர்களையும் எம்.ஐ ரசிகர்களையும் அதிகம் நம்புகிறுத. மேலும் ஷேர்சேவ் மூலம் தனது தயாரிப்புக்களை மக்களிடையே எளிதில் சேர்க முடியும் என நம்புகிறோம். ஷேர்சேவ் தளத்தில் எம்.ஐ வாடிக்கையாளர் ஆனைவரும் தங்களுக்குள்ள பேசிக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த தளத்தின் மூலம் மக்களுக்கு என்ன தயாரிப்புகளில் ஆர்வம் இருக்கிறது மற்றும் இனி புதிதாக என்ன அப்டேட்களை தரலாம் பேன்ற பல தகவல்களை பெற முடியும்' என சியோமி நிறுவனம் தனது பதிவில் தெரிவித்திருந்தது.
அதுபோன்று இந்த சியோமி தளத்தில் வாடிக்கையாளர்ளால் மூன்று வகை தள்ளூபடியில் பொருட்களை வாங்க முடியும் (பேர் அப், டிராப், கிக்ஸ்டிராட்) என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஷேர்சேவ் தளத்தில் நமது நண்பர்களையோ, உறவினர்களையோ இந்தி தளத்திற்கு வர அழைப்பு விடுத்தால் தள்ளூபடி கிடைக்கும். டிராப் தள்ளூபடி மூலம் குறிப்பிட சில பொருட்களை நாம் தேர்வு செய்த பின்னர் நமது குடும்பத்தினரை அழைக்க வேண்டும், எவ்வளவு அதிக நபர்களை நாம் அழைக்கிறோமோ அவ்வளவு தள்ளூபடி கிடைக்க வாய்பு இருக்கிறது. அப்படி குறிவைத்தை நண்பர்கள் இணைந்தால் 50 % அல்லது இலவசமாகவோ பொருட்கள் கிடைக்கலாம்.
அத்துடன் கிக்ஸ்டிராட் தள்ளூபடி பட்டியலில் 14 ரூபாய் முதல் பொருட்களை வாங்க முடியும். அத்துடன் முழுமையான கட்டனத்திற்கு அப்பொருள் எட்டிவிட்டால் சுமார் 10 மடங்கு வரை கேஷ்பேக் பெற வாய்புள்ளது எனவும் இந்த தள்ளூபடியை பெற விரும்பாவதவர்கள் இந்த முறையில்லாமலும் பொருட்களை பெற முடியும் என தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த செயலியில் பொருட்களை வாங்கினால் விட்டின் வாசல் வரை வந்து பொருட்களை டெல்லிவெரி செய்வார்கள் .
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்