அறிமுகமாகிறது Mi TV Stick.. எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ

விளம்பரம்
Written by Ali Pardiwala மேம்படுத்தப்பட்டது: 30 ஜூலை 2020 10:19 IST
ஹைலைட்ஸ்
  • ஆகஸ்ட் 5 ஆம் தேதி எம்ஐ டிவி ஸ்டிக் அறிமுகமாகிறது
  • அமேசான் ஃபயர் ஸடிக் விட விலை குறைவாக இருக்கலாம்
  • கூகுள் அசிஸ்டெண்ட் வசதி உள்ளது

எம்ஐ டிவி ஸ்டிக் ஐரோப்பாவில் இம்மாத தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது

இந்தியாவில் எம்ஐ டிவி ஸ்டிக் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுவதாக ஷாவ்மி அறிவித்துள்ளது.

ஷாவ்மி தரப்பில் எம்ஐ டிவி ஸ்டிக் இம்மாத தொடக்கத்தில் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு இதன் விலை 39.99 யூரோ (இந்திய மதிப்பில் சுமார் 3,500 ரூபாய்) என்று நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது இந்தியாவிலும் எம்ஐ டிவி ஸ்டிக் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக எம்ஐ.,யின் டுவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி எம்ஐ டிவி ஸ்டிக் அறிமுகமாகிறது. இது அமேசானின் ஃபயர் ஸ்டிக்கிற்குப் போட்டியாக, அதே அம்சங்களுடன் வருகிறது. 

முன்னதாக கடந்த மே மாதம் எம்ஐ பாக்ஸ் 4K வந்தது. அதன் மினியேச்சர் வடிவமே எம்ஐ டிவி ஸ்டிக் ஆகும். எம்ஐ பாக்ஸில் உள்ளதே போன்றே ரிமோட் வழங்கப்படுகிறது. ஆனால், டிவி ஸ்டிக் குவாலிட்டி 4K கிடையாது. மாறாக ஃபுல் ஹெச்டி (1920x1080 பிக்சல்) குவாலிட்டியில் எம்ஐ டிவி ஸ்டிக் வருகிறது. 

வாய்ஸ் அசிஸ்டெண்ட் அம்சமும் இந்த ரிமோட்டில் உள்ளது. இதன் மூலம் நமக்குத் தேவையான ஆப்ஸ், திரைப்படங்கள் போன்றவற்றை சொன்னாலே போதும், திரையில் தோன்றி விடும். நெட்பிலிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட் ஸ்டார் போன்ற ஒடிபி தளங்களும் உள்ளது.  இந்தியாவில் இதன் விலை 4 ஆயிரத்துக்குள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான விவரங்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி, எம்ஐ டிவி ஸ்டிக் அறிமுகமாகும் போது தெரியவரும்.


Why do Indians love Xiaomi TVs so much? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.