Mi Earbuds 2 விலை குறைப்பு! புதிய விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 24 ஜூலை 2020 10:21 IST
ஹைலைட்ஸ்
  • Mi True Wireless Earphones 2 can offer four hours of music playback
  • They come with voice assistant and quick charging support
  • Mi True Wireless Earphones 2 are available on Mi.com

இந்தியாவில் ஷாவ்மி எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஷாவ்மி நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 என்ற இயர்பட்ஸை அறிமுகம் செய்தது. அப்போது இதன் விலை 4,499 என்று நிர்ணயித்தது. அதேசமயம் நிறுவனத்தின் ஸ்ட்ரீமிங் பாக்ஸ் ஷாவ்மி எம்ஐ பாக்ஸ் 4 கே மற்றும் புதிய எம்ஐ 10 ஸ்மார்ட்போன் ஆகியவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.

இதனையடுத்து ஒன்பிளஸ், விவோ உள்ளிட்ட நிறுவனங்கள் TWS எனப்படும் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ்களை அண்மையில் அறிமுகம் செய்தது.  இதனால் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்க ஷாவ்மி நிறுவனம் தனது வயர்லெஸ் இயர்பட்ஸின் விலையை குறைக்க முடிவு செய்தது. அதன்படி, தற்போது எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2  இன் விலை 500 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ. 4,499 இலிருந்து ரூ.3,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் ஷாவ்மியின் இந்த இயர்பட்ஸை, mi.com மற்றும் அமேசான் ஆன்லைனில் வாங்கிக்கொள்ளலாம். முன்னதாக ஒன்பிளஸ்  பட்ஸ் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்விலை 4,990 ரூபாய் என்று நிர்ணியக்கப்பட்டது. ஆனால், இது ஆகஸ்ட் மாதம் தான் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாவ்மி எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 சிறப்பம்சங்கள்:

ஷாவ்மியின் புதிய வயர்லெஸ் இயர்போன் ஆப்பிள் ஏர்போட்களைப் போலவே இருக்கின்றன. 14.2 மிமீ டைனமிக் டிரைவர் கொண்டது. இந்த சாதனம் புளூடூத் 5.0 உடன் எஸ்.பி.சி, ஏஏசி மற்றும் எல்எச்.டி.சி புளூடூத் கோடெக்குகளை ஆதரிக்கிறது. இயர்போனில் 30 mAh பேட்டரி உள்ளது. இந்த சார்ஜிங் கேசில் 250 mAh பேட்டரி உள்ளது. டச் சென்சிடிவ் கண்ட்ரோல் வழியாக இந்த இயர்போனில் பிளேபேக்கைக் கட்டுப்படுத்தலாம். கூகுள் அசிஸ்டெண்ட், அலெக்சா மற்றும் சிரி ஆதரவு உள்ளது.


Why do Indians love Xiaomi TVs so much? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டிசைனிங் கத்துக்கணுமா? அடோப் டூல்ஸ் இப்போ ஃப்ரீ! இந்திய மாணவர்களுக்கு 'அடோப்' தந்த செம்ம கிப்ட்
  2. WhatsApp குரூப்ல இப்போதான் சேர்ந்தீங்களா? கவலைப்படாதீங்க! பழைய 100 மெசேஜ்களை இனி நீங்க படிக்கலாம்
  3. ஜியோ ஹாட்ஸ்டார் சாட்ஜிபிடி வேற லெவல் என்டர்டைன்மென்ட்! இனி நம்ம ஊர் மொழியிலேயே பேசி படங்களைத் தேடலாம்
  4. சாட்ஜிபிடி இப்போ நம்ம காலேஜுக்குள்ளயே வந்துடுச்சு! 1 லட்சம் மாணவர்களுக்கு ஸ்பெஷல் கோர்ஸ்.. ஓபன் ஏஐ-யின் அதிரடி பிளான்
  5. டெல்லியில் 1,100-க்கும் மேற்பட்ட போலி நதிங், CMF பொருட்கள் பறிமுதல்! கூகுள் போல நதிங் நிறுவனமும் எச்சரிக்கை - முழு விவரம்
  6. இனி இன்டர்நெட் வேகம் வேற லெவல்ல இருக்கும்! கடலுக்கு அடியில் கூகுள் போடும் புதிய கேபிள் ரூட்கள்
  7. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜியோவின் மெகா கிப்ட்! ரூ.1457 பெனிபிட்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே
  8. Pixel 10a வந்தாச்சு மக்களே! தரமான கேமரா, வேற லெவல் பேட்டரி.. ஐபோனுக்கு செம்ம டஃப் கொடுக்கும் போலயே
  9. இனி டேட்டா கேபிள் தேவையில்லை! Pixel 9 போன் வச்சிருக்கீங்களா? ஐபோனுக்கு அசால்ட்டா ஃபைல் அனுப்பலாம்
  10. மே 19-ல் கூகுள் போடப்போகும் மெகா பிளான்! Android 17 முதல் Gemini AI வரை - முழு விபரம் இதோ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.