ரியல்மியின் இரண்டு புதிய தயாரிப்புகள் மே 25-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகிறது!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 18 மே 2020 11:13 IST
ஹைலைட்ஸ்
  • ரியல்மி வெளியீட்டு நிகழ்வு மே 25 அன்று மதியம் 12:30 மணிக்கு தொடங்கும்
  • நிகழ்வில் ரியல்மி டிவி மற்றும் ரியல்மி வாட்ச் வெளியிடப்படும்
  • நிகழ்வு நிறுவனத்தின் சமூக ஊடக சேனல்களில் ஸ்ட்ரீம் செய்யப்படும்

மே 25 அன்று ‘Watch the TV’ என்று ரியல்மி ரசிகர்களை அழைத்துள்ளது

ரியல்மியின் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஸ்மார்ட் டிவி ஆகியவை மே 25-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகின்றன. சீன நிறுவனம் சமீபத்தில் இந்த இரண்டு தயாரிப்புகளின் வெளியீட்டு தேதியை சமூக ஊடகங்களில் அறிவித்தது. நிறுவனம் ஏற்கனவே பல்வேறு ஊடகங்களுக்கு அறிமுகத்திற்கான அழைப்புகளை அனுப்பியுள்ளது. ரியல்மி வெளியீட்டு நிகழ்வை யூடியூப் உட்பட, கிட்டத்தட்ட எல்லா சமூக ஊடக தளங்களிலிருந்தும் நேரடியாக ஒளிபரப்பவுள்ளது.

நிகழ்வு மே 25 அன்று மதியம் 12:30 மணிக்கு தொடங்கும். ரியல்மி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஸ்மார்ட் டிவி அறிமுகத்தை Twitter, Facebook மற்றும் YouTube-ல் இருந்து ஒளிபரப்பவுள்ளது.

ரியல்மியின் முதல் ஸ்மார்ட் டிவி 43 அங்குல டிஸ்ப்ளேவுடன் வரும். இதில் ஆண்ட்ராய்டு டிவி மற்றும் Google உதவியாளர் ஆதரவு உள்ளது. இருப்பினும், சீன நிறுவனம் 43 அங்குல மாடலுடன் 32 அங்குல டிஸ்ப்ளே டிவியை அறிமுகப்படுத்தலாம்.

சீன நிறுவனம் கடந்த வாரம் ரியல்மி வாட்சிற்கான டீஸரையும் வெளியிட்டது. ஐபி 68 நீர் எதிர்ப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்வாட்சில், 1.4 இன்ச் டிஸ்ப்ளே இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கேஜெட்ஸ் 360-க்கு அளித்த பேட்டியில், ரியல்மி தலைவர் மாதவ் ஷெத், நிறுவனம் 2020-ஆம் ஆண்டில் ஸ்மார்ட்வாட்ச்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் என்று கூறினார்.

ஸ்மார்ட்வாட்ச் வெளியீடு சமீபத்தில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து வீடியோவை பதிவிடுவதன் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மாதவ் ஷெத் இதே வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

வீடியோவில் உள்ள இந்த ஸ்மார்ட்வாட்சின் அளவு ஆப்பிள் வாட்சை நினைவூட்டுகிறது. இதில் வளைந்த டிஸ்ப்ளே உள்ளது. இந்த தயாரிப்பு ரியல்மி வாட்ச் என்ற பெயரில் சந்தைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Which is the bestselling Vivo smartphone in India? Why has Vivo not been making premium phones? We interviewed Vivo's director of brand strategy Nipun Marya to find out, and to talk about the company's strategy in India going forward. We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme, Realme TV, Realme Watch
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. பிரபலமான 'சோரா' AI வீடியோ செயலியை மூடுகிறது ஓபன்ஏஐ; டிஸ்னியுடனான மெகா ஒப்பந்தமும் முறிவதாகத் தகவல்
  2. தாய்லாந்தின் NBTC சான்றிதழ் தளத்தில் சியோமி 17T ப்ரோ: விரைவில் சர்வதேச அளவில் அறிமுகம்
  3. முழுத்திரை வசதி கொண்ட ஐபோன் 20 இல்லையா? ஆப்பிளின் 20-வது ஆண்டு மாடலில் அதன் மிக முக்கிய அம்சம் ஏன் இடம் பெறாமல் போகலாம்?
  4. ஐபோன்களுக்கான iOS 26.4 அப்டேட்: ஆப்பிள் மியூசிக்கில் AI மூலம் உருவாக்கப்பட்ட பிளேலிஸ்ட்கள் மற்றும் 8 புதிய எமோஜிகள்
  5. சாம்சங் கேலக்ஸி S27 அல்ட்ராவில் டிஜிடைசருடன் கூடிய 'S Pen' ஆதரவு தொடர்ந்து இடம்பெறும்
  6. இந்தியாவில் வெளியாகும் முன்பாக ரியல்மி 16 5G பேட்டரி திறன், நிறங்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் வெளியீடு
  7. BSNLல் CNAP வசதி தொடக்கம்; நாடு தழுவிய 'காலர் ஐடி' சேவை விரைவில் எதிர்பார்ப்பு
  8. 7,500mAh பேட்டரி, இரட்டை 50-மெகாபிக்சல் கேமராக்களுடன் ஒன்பிளஸ் 15T அறிமுகமானது: விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ
  9. Apple Maps Ads Coming Soon to iPhone and Other Devices: Apple's New Plan
  10. ஜூன் 8-ல் ஆப்பிளின் WWDC 2026 தொடக்கம்: AI மற்றும் மென்பொருள் மேம்பாடுகள் அறிமுகம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.