ரியல்மியின் முதல் ஸ்மார்ட் டிவி இந்த ஆண்டு வெளியாகிறது! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 6 ஏப்ரல் 2020 12:40 IST
ஹைலைட்ஸ்
  • ரியல்மி இந்த ஆண்டு தனது முதல் ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தும்
  • ரியல்மி டிவியின் தொடக்க அளவு 43-இன்ச் இருக்கும்
  • மற்ற அளவு ஆப்ஷன்களும் இருக்கலாம்

ரியல்மி இந்த ஆண்டு தனது முதல் ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ரியல்மி, போன்கள், ஆடியோ தயாரிப்புகளை அடுத்து, அதன் முதல் ஸ்மார்ட் டிவியை இந்த ஆண்டு பிற்பகுதியில் அறிமுகப்படுத்தவுள்ளது. வரவிருக்கும் ரியல்மி டிவியை 43-இன்ச் திரை அளவில் வழங்கும் என்று ஒரு சான்றிதழ் வலைத்தளத்தின் பட்டியல் தெரிவிக்கிறது. மற்ற திரை அளவுகளும் இருக்கலாம்.

Realme TV-யின் அடிப்படை வேரியண்ட் 43-இன்ச் திரையும், அதன் டாப்-எண்ட் வேரியண்டில் 55-இன்ச் திரையும் இருக்கும் என்று பட்டியலில் உள்ள மாதிரி எண் JSC55LSQL தெரிவிக்கிறது.

இந்தியாவில் ரியல்மி டிவியின் காலவரிசை, கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்படலாம். இப்போது டிவி பற்றி எந்த விவரக்குறிப்புகளும் தெரியவில்லை. ஆனால், டிவியில் எச்டிஆருக்கான ஆதரவுடன் அல்ட்ரா-எச்டி மாதிரிகள் இடம்பெறும். அவை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடிப்படையில் ஆண்ட்ராய்டு டிவி / தனிப்பயன் பயனர் இடைமுகத்தில் இயங்கும் ஸ்மார்ட் டிவியாகவும் இருக்கும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme, Realme TV, Smart Tv
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.