ரியல்மி பட்ஸ் 3 இம்மாதம் அறிமுகம்... கூடவே ரியல்மி லேப்டாப் அறிமுகமா?

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 3 ஆகஸ்ட் 2020 12:05 IST
ஹைலைட்ஸ்
  • Realme Buds 3 price details are yet to be revealed
  • Sheth hosted the video session to spill some beans on Realme’s roadmap
  • Realme plans to bring a high-end smartwatch, the executive said

இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் வருவதற்கு முன்பாக ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் வந்துவிடும்

ரியல்மி தரப்பில் பட்ஸ் 3 இம்மாதம் அறிமுகம் செய்யப்படுவதாகவும், அதோடு ரியல்மி லேப்டாப்பும் அறிமுகமாகலாம் என்றும் தகவல்கள் வந்துள்ளன.

ரியல்மி நிறுவனம் கடந்தாண்டு அறிமுகம் செய்த வயர்ட் இயர்ட் பட்ஸ் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் ரியல்மி நிறுவனம், பட்ஸ் தயாரித்து வருவதாக செய்திகள் வந்தன. இந்த நிலையில், ரியல்மி நிறுவனத்தின் சிஇஓ மாதவ் செத் ஒரு வீடியோவில் பேசினார். அப்போது அவர் ரியல்மி, இந்த மாதம் இயர்பட்ஸ் 3 அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்தார். 

மேலும், ரியல்மியின் பட்ஸ் 3 புதுவிதமாகவும், தனித்துவம் பெற்றதாகவும் இருக்கும் என்று கூறிய அவர், ரியல்மி லேப்டாப் கொண்டு வருவது குறித்து கவனத்தில் வைத்திருப்பதாகவும் கூறினார். ஏற்கனவே ஸ்மார்ட்போன் பிராண்டுகளான ரெட்மி, ஹானர் நிறுவனங்கள் இந்தாண்டு லேப்டாப் தயாரிப்பிலும் இறங்கவிட்டன. 

இந்தியாவைப் பொறுத்தவரையில் ரியல்மி, ரெட்மி நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும், ரெட்மி லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், அதற்கு இணையாக ரியல்மியும் லேப்டாப் அறிமுகம் செய்யும் என்று வாடிக்கையாளர்கள் ஏற்கனவே கணித்திருந்தனர். 

தற்போது அந்தக் கணிப்பு நனவாகும் வகையில், ரியல்மியின் சிஇஓ, லேப்டாப் குறித்து கவனத்தில் வைத்திருப்பதாக கூறியுள்ளார். மேலும், 5ஜி ஸ்மார்ட்போன் பற்றி கூறுகையில், இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் வருவதற்கு முன்பாக நிச்சயம் ரியல்மி தரப்பில் 5ஜி ஸ்மார்ட்போன் வந்துவிடும் என்றார். இதே போல் ஸ்மார்ட்வாட்சிலும் ரியல்மி நிறுவனம் காலூன்ற இருப்பதாகவும் தெரிவித்தார்.

Last month, Sheth teased a “big announcement” taking place at IFA 2020 in September. It could be the venue where the company is likely to showcase its new offerings ahead of their arrival in India and global markets.


Is Realme TV the best TV under Rs. 15,000 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme Buds 3, Realme Laptops, Realme, Madhav Sheth
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. யாருப்பா அது பட்ஜெட்ல ஐபோன் கேட்டது? iPhone 16e விலையில் ரூ.11,500 வரை டிஸ்கவுண்ட்! Apple Intelligence வசதியுடன் செம டீல்
  2. S25 சீரிஸ் வந்தா என்ன, எங்களுக்கு ராஜா 'S24 Ultra' தான்! பிளிப்கார்ட்ல ரூ.25,000-க்கு மேல விலை குறைஞ்சிருக்கு
  3. பட்ஜெட்ல ஒரு 'Ultra' போன் வேணுமா? Vivo T4 Ultra இப்போ செம சீப்! பிளிப்கார்ட் ஆஃபர்ல அள்ளிட்டு போங்க!
  4. S25-க்கே இன்னும் வழிய காணோம்.. அதுக்குள்ள S26 லீக்ஸ் வந்துடுச்சா? 50MP கேமராவுடன் களமிறங்கும் Samsung
  5. சாம்சங்-கின் அடுத்த அதிரடி! பட்ஜெட் விலையில் 5G போன் வேணுமா? Galaxy F70e-க்காக கொஞ்சம் வெயிட் பண்ணுங்க
  6. ஆப்பிள் கிட்ட இப்போ 250 கோடி டிவைஸ்கள் இருக்கு! அதுவும் இந்தியா தான் அவங்களோட 'ஃபேவரைட்' இடமாம்
  7. விலை குறைப்புனா இதுதான் விலை குறைப்பு! Samsung Galaxy S24 இப்போ ரூ.31,000 தள்ளுபடியில் அமேசானில் கிடைக்குது
  8. ஒன்பிளஸ் பிரியர்களுக்கு ஜாக்பாட்! 6,000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 8 Gen 3 சிப்செட் - இப்போ செம மலிவான விலையில்
  9. ரெட்மி-க்கு செம டஃப்! பட்ஜெட் விலையில பிரீமியம் அம்சங்களை அள்ளித் தெளிக்கும் Moto G67 & G77 - நீங்க எதை வாங்குவீங்க?
  10. போனுக்குள்ளேயே ஃபேனா? 7000mAh பேட்டரி வேறயா! பட்ஜெட் விலையில் பிளாக்ஷிப் கேமிங் போன் - REDMAGIC 11 Air வந்தாச்சு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.