தற்போது நடந்துகொண்டிருக்கும் உலகக்கோப்பை தொடரை கொண்டாடும் விதமாக சியோமி நிறுவனம் எம் ஐ பவர் பேன்க் - 'உலகக்கோப்பை எடிசன்'-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 10000mAh அளவிலான இந்த 'உலகக்கோப்பை எடிசன்' எம் ஐ பவர் பேன்க் 2i, நீல நிறத்தில் வெளியாகியுள்ளது.
முன்னதாக சியோமி நிறுவனம், இந்த 'எம் ஐ பவர் பேன்க் 2i'-ஐ கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்களில் விற்பனை செய்துகொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எம் ஐ பவர் பேன்க் 2i - 'உலகக்கோப்பை எடிசன்' இரண்டு யூ எஸ் பி போர்ட்களை கொண்டுள்ளது.
இந்தியாவிற்காக விளையாடும் 'மென் இன் ப்ளூ' வீரர்களை பெருமை படுத்தவும், மேலும் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கிலும், சியோமி நிறுவனம், இந்த நீல நிற எம் ஐ பவர் பேன்க் 2i - 'உலகக்கோப்பை எடிசன்' அறிமுகப்படுத்தியுள்ளது. Mi.com தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள இந்த பவர் பேன்கின் விலை ரூபாய் 999 மட்டுமே.
சியோமி நிறுவனம் தற்போது உள்ள இந்த மாடல் பவர் பேன்க்களை 899 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்த புதிய 'உலகக்கோப்பை எடிசன்' எம் ஐ பவர் பேன்க் 2i-கின் விலையை இந்த விலையிலிருந்து 100 ரூபாய் அதிகரித்து விற்பனைக்கு வைத்துள்ளது எம் ஐ நிறுவனம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்