TikTok-ஐ ஓரங்கட்ட Facebook எடுக்கும் அஸ்திரம்... Mark போடும் ஸ்கெட்ச்!

விளம்பரம்
Written by Indo-Asian News Service மேம்படுத்தப்பட்டது: 4 அக்டோபர் 2019 18:09 IST

TikTok அமெரிக்காவில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், இந்தியாவில் விரைவாக வளர்ந்து வருவதாகவும் ஒப்புக் கொண்ட Facebook தலைமை நிர்வாக அதிகாரி Mark Zuckerberg, ஊழியர்களுடனான சந்திப்புகளில் சீன குறுகிய வீடியோ பகிர்வு தளத்தின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்ப்பதற்கான தனது சொந்த திட்டங்களை வெளியிட்டார். அதன் விவரங்கள் இப்போது கசிந்துள்ளன.

TikTok உடன் போட்டியிட பேஸ்புக்கிற்கு "பல அணுகுமுறைகள்" உள்ளன என்று கூறிய Zuckerberg, TikTok ஏற்கனவே பெரிதாக இல்லாத சந்தைகளில் அதன் உத்திகளின் செயல்திறனை முதலில் சோதிக்கும் என்று The Verge செவ்வாயன்று வெளியிட்ட விவரங்களின்படி கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட, Beijing-based ByteDance-க்கு சொந்தமான TikTok, நாட்டில் பேஸ்புக் உடனான இடைவெளியை வேகமாக குறைத்து வருகிறது.

"எனவே நாங்கள் இதை நோக்கி பல அணுகுமுறைகளை எடுக்கப் போகிறோம். மேலும், Lasso என்ற ஒரு தயாரிப்பு எங்களிடம் உள்ளது. இது நாங்கள் வேலை செய்யும் ஒரு முழுமையான செயலியாகும். மெக்ஸிகோ போன்ற நாடுகளில் தயாரிப்பு-சந்தையை பெற முயற்சிக்கிறேன். நான் இதை முதல் ஆரம்பங்களின் ஒன்றாக நினைக்கிறேன்" என்று Zuckerberg மேற்கோள் காட்டினார்.

"நாங்கள் TikTok ஏற்கனவே பெரிதாக இல்லாத நாடுகளில் வேலை செய்ய முடியுமா என்று முதலில் பார்க்க முயற்சிக்கிறோம். நாங்கள் சென்று TikTok உடன் பெரிய நாடுகளில் போட்டியிடுவதற்கு முன்பு," Facebook எவ்வாறு திட்டமிடுகிறது என்ற கேள்விக்கு, TikTok-ன் இளைஞர்கள் மற்றும் Gen Z மத்தியில் வளர்ந்து வரும் கலாச்சார செல்வாக்கை எதிர் கொள்வோம் என்று, அவர் பதிலளித்தார். 

கடந்த ஆண்டு நவம்பரில், TikTok உடன் போட்டியிட, Facebook "Lasso" என்ற தனித்த செயலியை அமைதியாக வெளியிட்டது.

மேலும், TikTok கிட்டத்தட்ட  Instagram's Explore Tab போன்றது என்று Facebook தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

"TikTok-க்கைப் பற்றி கதைகளை ஆராய்வது போல் நான் நினைக்கிறேன். அது முழு செயலியாகும்" என்று Zuckerberg கூறினார்.

Advertisement

"நாங்கள் Instagram-ல் பல அணுகுமுறைகளை எடுத்து வருகிறோம். அதை உருவாக்குவதோடு, எக்ஸ்ப்ளோர் கதைகளில் அதிக கவனம் செலுத்துகிறது. இது Instagram-ல் people consume content-ன் முதன்மை வழியாக இவை அதிகரித்து வருவதோடு, மேலும் சில விஷயங்களிலும் உள்ளது" என்று, அவர் கூறினார்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Mark Zuckerberg, Facebook, Instagram, TikTok
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.