1,699 ரூபாய்க்கு 455 நாள் ப்ரீபெய்ட் பிளான்! BSNL-ன் அதிரடி ஆஃபர்!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 4 அக்டோபர் 2019 18:05 IST
ஹைலைட்ஸ்
  • ரூ.1,699 திட்டத்தை BSNL விரிவுபடுத்தியுள்ளது
  • ரூ.186 மற்றும் ரூ.187 திட்டத்தில் கூடுதல் டேட்டாவை வழங்குகிறது
  • Unlimited voice மற்றும் தினசரி 100 SMS-ஐ வழங்குகிறது

BSNL-ன் பண்டிகை கால சலுகையாக unlimited voice calling-ஐ வழங்குகிறது

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) வியாழக்கிழமை தனது தற்போதைய மற்றும் புதிய பயனர்களுக்கு திட்டங்களை வழங்குவதற்கான பண்டிகை சலுகையை அறிவித்தது. புதிய சலுகை ரூ .1,699 உடன் ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 455 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதேபோல், ரூ. 106 மற்றும் ரூ. 107 ப்ரீபெய்ட் திட்டங்கள் அதன் புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்று state-run operator அறிவித்திருந்தனர். அதேபோன்று, ரூ. 186 மற்றும் ரூ. 187 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களுக்கு கூடுதல் டேட்டாவை வழக்கவுள்ளது. இந்த பண்டிகை காலங்களில் இயங்கும் புதிய சலுகையுடன் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்களுக்கு எதிராக போட்டியிட டெல்கோ இலக்கு வைத்துள்ளது.

அக்டோபர் 31 வரை, பி.எஸ்.என்.எல் அதன் ரூ. 1,699 ப்ரீபெய்ட் திட்டம் 455 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முதலில் 365 நாட்கள் செல்லுபடியை வழங்கியது. இருப்பினும் அதன் செல்லுபடியாகும் தன்மை ஆகஸ்ட் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு 455 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

ரூ. 1,699 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம், 2 ஜிபி தினசரி டேட்டா, unlimited voice மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் செய்திகளை வழங்குகிறது.

பி.எஸ்.என்.எல் ரூ. 106 மற்றும் ரூ. 107 ப்ரீபெய்ட் திட்டத்தில், புதிய வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் 24 நாட்களுக்கு unlimited voice calling-ஐ சலுகைகளுடன் வழங்குகிறது. ரூ. 186 மற்றும் ரூ. 187 ப்ரீபெய்ட் திட்டங்கள் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் unlimited voice மற்றும் 28 நாட்களுக்கு 100 எஸ்எம்எஸ் செய்திகளை வழங்க மேம்படுத்தப்பட்டுள்ளன. 

புதிய சலுகைகள் ரூ. 186 மற்றும் ரூ. 187 ப்ரீபெய்ட் திட்டங்கள் சமீபத்தில் பிஎஸ்என்எல் ஹரியானா தளத்தில் காணப்பட்டன. அந்த தளத்தில், முதன் முறை பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ரூ. 106 மற்றும் ரூ.107 ஆகிய திட்டங்களும் காண்பிக்கப்பட்டன.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டிசைனிங் கத்துக்கணுமா? அடோப் டூல்ஸ் இப்போ ஃப்ரீ! இந்திய மாணவர்களுக்கு 'அடோப்' தந்த செம்ம கிப்ட்
  2. WhatsApp குரூப்ல இப்போதான் சேர்ந்தீங்களா? கவலைப்படாதீங்க! பழைய 100 மெசேஜ்களை இனி நீங்க படிக்கலாம்
  3. ஜியோ ஹாட்ஸ்டார் சாட்ஜிபிடி வேற லெவல் என்டர்டைன்மென்ட்! இனி நம்ம ஊர் மொழியிலேயே பேசி படங்களைத் தேடலாம்
  4. சாட்ஜிபிடி இப்போ நம்ம காலேஜுக்குள்ளயே வந்துடுச்சு! 1 லட்சம் மாணவர்களுக்கு ஸ்பெஷல் கோர்ஸ்.. ஓபன் ஏஐ-யின் அதிரடி பிளான்
  5. டெல்லியில் 1,100-க்கும் மேற்பட்ட போலி நதிங், CMF பொருட்கள் பறிமுதல்! கூகுள் போல நதிங் நிறுவனமும் எச்சரிக்கை - முழு விவரம்
  6. இனி இன்டர்நெட் வேகம் வேற லெவல்ல இருக்கும்! கடலுக்கு அடியில் கூகுள் போடும் புதிய கேபிள் ரூட்கள்
  7. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜியோவின் மெகா கிப்ட்! ரூ.1457 பெனிபிட்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே
  8. Pixel 10a வந்தாச்சு மக்களே! தரமான கேமரா, வேற லெவல் பேட்டரி.. ஐபோனுக்கு செம்ம டஃப் கொடுக்கும் போலயே
  9. இனி டேட்டா கேபிள் தேவையில்லை! Pixel 9 போன் வச்சிருக்கீங்களா? ஐபோனுக்கு அசால்ட்டா ஃபைல் அனுப்பலாம்
  10. மே 19-ல் கூகுள் போடப்போகும் மெகா பிளான்! Android 17 முதல் Gemini AI வரை - முழு விபரம் இதோ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.