இந்திய காலணி சந்தையில் கால் பதிக்கும் சியோமி...தெரிந்து கொள்ள வேண்டியவை

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 7 பிப்ரவரி 2019 17:54 IST
ஹைலைட்ஸ்
  • சியோமியின் பவலைதளத்தில் வெளியாகியுள்ள எம்ஐயின் புதிய காலணிகள்
  • ரூ.2,499 முதல் இந்த காலணிகள் விற்பனை செய்யப்படுகிறது.
  • பிளாக், கிரோ மற்றும் புளூ ஆகிய நிறங்களில் வெளியாகியுள்ள காலணிகள்

தற்போது 2,499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எம்ஐ காலணிகள்!

சீனாவின் முக்கிய நிறுவனங்களில் ஓன்றான சியோமி, இந்தியாவில் தனது புதிதாக வடிவமைக்கப்பட்ட காலணிகளை விற்பனை செய்ய முடிவெடுத்தது. அதன் பற்றிய தகவல்களை அறிக்கையாக வெளியிட்டு சில தினங்களே ஆன நிலையில், தனது எம்.ஐ மென்ஸ் ஷூஸ்யை அறிமுகம் செய்துள்ளது.

ஆண்களுக்கான இந்த எம்.ஐ மென்ஸ் ஸ்போர்ட்ஸ் ஷூ 2, 5 இன் 1 யுனி மோல்டிங் டெக்னாலஜியை கொண்டு தயாரிக்கப்படுகிறது. வெளிபுறம் சிந்தட்டிக்காலும், வேக்ம் அழுத்தம் கொண்ட மிட்சோல், குஷின் பேட்ச் மற்றும் பியு லேயரை கொண்ட இந்த ஹைடெக் காலணி அதிர்ச்சியை தாங்கும் சக்தியுடனும், நீண்டநாள் உறுதியாகவும் வழுக்காமலும் இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் சியோமி காலணிகளில் இருக்கும் 10 விஷ்போன் அமைப்பு கால்களை வசதியாக வைத்து கொள்ள உதவுகிறது. இந்த தொழிநுட்பத்தால் அடிபடுவதற்கு குறைவான வாய்ப்புகளே உள்ள நிலையில் சுழுக்கு போன்ற சதை பிடிப்புகளையும் இந்த காலணி தவிர்க்கும். மேலும் சியோமி நிறுவனம் சார்பாக வெளியான தகவல் படி காற்று புகக்கூடிய தன்மையை கொண்டது அதனால் இந்த காலணிகளை வாஷிங் மிஷின்களில் போட்டு துவைக்கவும் எளிமையாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

சில காலத்திற்கு முன்னரே தனது புதிய டிவி தயாரிப்பையும், மைக்ரோ பிரேய்ட் கேபிள்கள் ஆகியவற்றை தயாரித்த நிலையில் இந்த புதிய தயாரிப்பை இந்திய வாடிக்கையாளர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும். சியோமியின் இணையதளத்தில் இந்த புதிய தயாரிப்பு ஏற்கனவே முதற்கட்ட சேலாக ரூபாய் 2,499 க்கு வெளியாகியுள்ள நிலையில் அவைகள் கருப்பு, க்ரே மற்றும் நீல நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர்.

தற்போது ஆர்டர் செய்யப்படும் காலணிகள் மார்ச் மாதம் 15 ஆம் தேதி ஷூப்பிங் செய்யப்படும். இந்த சேலுக்கு பின்னர் தனது ஓரிஜினல் விலையான ரூபாய் 2,999 க்கு விற்பனை செய்யப்படும்.  இன்னும் 10 நாட்கள் இந்த சேல் தொடரும் என்ற நிலையில் சுமார் 5,000 யுனிட் காலணிகளை விற்பனை செய்ய சியோமி நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

மேலும் இந்த காலணிகளை பற்றி  பேசிய சியோமி நிறுவனத்தின் (கடெகிரி மற்றும் ஆன்லைன் சேல்ஸ்) தலைவர் ரகு ரெட்டி ‘இந்த 2019 ஆம் ஆண்டை இரண்டு புதிய தயாரிப்புகளுடன் தொடங்கியுள்ளோம். இந்த மகிழ்ச்சிகரமான சமையத்தில் எம்ஐ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஆண்களுக்கான விளையாட்டுகளுக்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட காலணிகள் வெளியிடுவது சந்தோஷமாக உள்ளது. மேலும் இந்த புதிய காலணிகள் அசத்தும் டிசையின் மற்றும் சிறந்த விலையை கொண்டுள்ளதால் எம்ஐ வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளதாக' தெரிவித்தார்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: , Xiaomi, Xiaomi Shoes
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. புதிய Z தொடர் மாடலின் வருகையை நிறுவனம் டீஸ் செய்துள்ளதால் iQOO Z11 விரைவில் இந்தியாவில் அறிமுகமாகலாம்
  2. சாம்சங் கேலக்ஸி A08, F08 மற்றும் M08 போன்கள் BIS தரவுத்தளத்தில் இடம்பெற்றுள்ளன; இந்தியாவில் விரைவில் அறிமுகம்
  3. ஐபோன் 18 ப்ரோ மற்றும் மேக்ஸ் பேட்டரி திறன் கசிந்தது. சீனா மற்றும் அமெரிக்க மாடல்களில் பேட்டரி மாறுபடும்
  4. Vi, Jio மற்றும் Airtel க்காக உங்கள் நகரத்தில் 5G நெட்வொர்க் கவரேஜை ஆன்லைனில் சரிபார்க்கும் முறை
  5. WhatsApp இல் உங்கள் பயனர் பெயரை (Username) முன்பதிவு செய்வது எப்படி: ஒரு படிப்படியான வழிகாட்டி
  6. ரூ. 80,000-க்குள் கிடைக்கும் சிறந்த கேமிங் லேப்டாப்கள்: ஆசஸ் டஃப் A15, லெனோவா LOQ மற்றும் பல சிறந்த தேர்வுகள்
  7. மோட்டோ ஜி77 பவர் ஜூலை 8 வெளியீட்டிற்கு முன் இணையதளத்தில் முக்கிய விவரக்குறிப்புகளுடன் பட்டியலிடப்பட்டது
  8. நத்திங் போன் 4b இந்தியா அறிமுகம்: வெளியீட்டு தேதி, எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்
  9. அமேசான் பிரைம் டே 2026: ஃபயர் டிவி ஸ்டிக் மற்றும் ஸ்ட்ரீமிங் சாதனங்களுக்கான சிறந்த சலுகைகள்
  10. அமேசான் பிரைம் டே 2026 லேப்டாப் டீல்கள்: HP, Asus, Lenovo, Dell, Acer மாடல்களுக்கு சிறந்த தள்ளுபடிகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.