அறிமுகமானது சவுண்ட் ஓன் நிறுவனத்தின் 'டிரம்' ஸ்பீக்கர்!

விளம்பரம்
Written by Ali Pardiwala மேம்படுத்தப்பட்டது: 15 மார்ச் 2019 18:50 IST
ஹைலைட்ஸ்
  • ஆன்லையின் மற்றும் ஆஃப்லையின் கடைகளில் விற்பனையாகும் சவுண்ட் ஓன்!
  • 10 W அவுட் புட் வசதியை கொண்டுள்ளது.
  • சவுண்ட் ஓன் டிரம் ஸ்பீக்கர் IPX5 சான்றிதழை பெற்றுள்ளது.

IPX5 சான்றிதழை சவுண்ட் ஓன் டிரம் ஸ்பீக்கர் பெற்றுள்ளது.

பட்ஜட் ஆடியோ நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் நிலையில் தற்போது சவுண்ட ஓன் நிறுவனம் தனது 'டிரம்' போர்டபுள் வயர்லெஸ் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. 

இந்தியாவில் ரூ.3,490க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த போர்டபிள் ஸ்பீக்கர், ஆன்லையின் தளங்களான அமேசான், ஃபிளிப்கார்ட் போன்றவைகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஆச்சரியமாக அமேசானில் இந்த ஸ்பீக்கர் தற்போது 1,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

4.2 புளூடூத் கனெக்டிவிட்டியை கொண்ட இந்த சவுண்ட் 'டிரம்' தூசி மற்றும் தண்ணீர் புகாமல் இருக்கும் என்பதற்கான IPX5 சான்றிதழை பெற்றுள்ளது. 10W சவுண்டை வெளியேற்றும் ஸ்பீக்கர்களை  கொண்ட இந்த 'டிரம்' முக்கிய வசதியாக மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் பாடல்களை பிளே செய்யும் வசதியை கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்பீக்கரில் மைக் வசதி இடம்பெற்றுள்ளதால் வாயிஸ் கால்களை எளிதில் பேச முடிகிறது. 2,000mAh பேட்டரி வசதி கொண்ட இந்த ஸ்பீக்கர், ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் 8 மணிநேரம் வரை சார்ஜ் தாங்குகிறது. 

தனது கன்ட்ரோல் பட்டன்கள் அனைத்தும் ஸ்பீக்கரின் மேல் அமைந்திருக்கும் நிலையில் இதல் பொருத்தப்பட்டிருக்கும் ஃபேபிரிக்  போனை எளிதில் எடுத்து செல்ல உதவுகிறது. 649 கிராம் எடைகொண்ட இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர் 3.5mm நீளமுள்ள கேபிள் மற்றும் யுஎஸ்பி வசதியை கொண்டுள்ளது. 

ரூ.1,890க்கு சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட X60 என்னும் வயர்லெஸ் இயர்போன்ஸ் இன்னும் விற்பனையில் உள்ள நிலையில் அந்த இயர்போன்சும் நெக்பேண்ட் டிசைனை கொண்டுள்ளது. மேலும் சவுண்ட் ஓன் டிரம் ஸ்பீக்கர்களில் உள்ள IPX5 சான்றிதழை இந்த இயர்போன்சும் பெற்றுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Sound One, Sound One Drum, Bluetooth, Wireless Speaker
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சாம்சங் கேலக்ஸி A56 5G விலை உயர்விற்கிடையே ரூ. 7,000 தள்ளுபடியில் கிடைக்கிறது; சலுகையைச் சரிபார்க்கவும்
  2. மோட்டோ G77 பவர் மற்றும் ஒன்ப்ளஸ் நோர்ட் CE 6 லைட் மற்றும் ஐகூ Z10R 5G: ரூ.30,000 விலைக்குள் எது சிறந்த தேர்வு?
  3. ஹீரோ விடா விஎக்ஸ்2 பிளஸ் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்: விலை, இயங்குதூரம் மற்றும் அம்சங்கள்
  4. சோனி லிங்க்பட்ஸ் கிளிப் இந்தியாவில் அறிமுகம்: திறந்த காது வடிவமைப்பு,37 மணிநேர பேட்டரி, விலை மற்றும் அம்சங்கள்
  5. மோட்டோ G77 பவர் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: 7000mAh பேட்டரி, 50MP கேமரா, விலை மற்றும் சலுகைகள்
  6. Q2 2026-ல் சாம்சங் முதலிடம், ஆப்பிள் 4% வளர்ச்சி, உலகளாவிய தொலைபேசி ஏற்றுமதி சரிவு
  7. லாவா விராட் V1 5ஜி மற்றும் 4ஜி போன்கள் ஜூலை 21-ல் இந்தியாவில் அறிமுகம்; வடிவமைப்பு மற்றும் வண்ணங்கள் கசிவு
  8. ரெட்மி நோட் 17 இந்திய நிறங்கள், சேமிப்பக விவரங்கள் கசிவு; சீன வெளியீட்டுக்கு முன்பே முக்கிய அம்சங்கள் வெளியீடு
  9. ரேம் தட்டுப்பாட்டால் ஒன்ப்ளஸ் பேட் கோ 2 மற்றும் பேட் லைட் டேப்லெட் விலைகள் இந்தியாவில் கணிசமாக உயர்ந்துள்ளன
  10. ரெட்மி டர்போ 5 விமர்சனம்: பலரை ஈர்க்கும் கேமிங்-கிரேட் ஸ்மார்ட்போன்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.